கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், அம்பராம்பாளையம் ராமகிருஷ்ணா மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி கிரியப்பனவர் அவர்கள் கலந்து கொண்டு ஜாதி சான்றிதழ் விண்ணப்பம் செய்த பொதுமக்களின் ஜாதி சான்றுகள் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், அம்பராம்பாளையம் ஊராட்சி மற்றும் நாய்க்கன்பாளையம் ஊராட்சிகள் இணைந்து அம்பராம்பாளையம் ராமகிருஷ்ணா மஹாலில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்.T. யுவராஜ் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி கிரியப்பனவர் அவர்கள் கலந்து கொண்டுசாதி சான்றிதழ் விண்ணப்பம் செய்த பொதுமக்களின் ஜாதி சான்றுகள் வழங்கினார்.
அதுசமயம், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இமாலயா யுவராஜ் அவர்கள், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி தனி அலுவலர் ரவி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினகுமார் அவர்கள், அம்பராம்பாளையம் முன்னாள் தலைவர் சகர் பானு அவர்கள், பைசல்.அவர்கள், நாயக்கன் பாளையம் முன்னாள் தலைவர்.பி. கன்னி முத்து அவர்கள், ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் அவர்கள், துணை வட்டாட்சியர் பிரேமா அவர்கள், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி செயலாளர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.