விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக எப்போதும் கூட்டணிக்கு வாங்க என கூப்பிடவே இல்லையே என திமுக அமைச்சர் K. N . நேரு கிண்டலாக பதிலளித்தார். சென்னையை அடுத்த பனையூரில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை பாஜக ஏற்படுத்துகிறது. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது. பெரியார், அண்ணாவை அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றியை பெற இயலாது.
சுயநல அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ, அதிமுகவோ அல்ல தவெக. பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை. அதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். அதில் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்று விஜய் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ,திருநெல்வேலியில் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். அப்போது, பனையூரில் விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘விஜய் கட்சியை கூட்டணிக்கு வாங்கன்னு நாங்க கூப்பிடவே இல்லையே’ என கிண்டலாக K. N . நேரு பதில் அளித்தார்.