ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிந்து ஆட்டோ இயக்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், மது அருந்தி விட்டு ஒட்டக்கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிகளை குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் I.P.S., உத்தரவின்படி, இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்கள். அரியலூர் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இராமலிங்கம் மற்றும் உலகநாதன் உடன் இருந்தார்கள். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அரியலூர் நகரில் உள்ள ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் “ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிந்து ஆட்டோவை இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி மக்களை ஏற்றக்கூடாது,சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து ஆட்டோக்களை ஓட்ட வேண்டும், அதிவேகமாக ஓட்டக்கூடாது, மது அருந்தி விட்டு ஒட்டக்கூடாது, நகர் பகுதியில் peak hours கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.