மனைவியின் சொந்த குடும்ப உறுப்பினர்களான தந்தையும், சகோதரரும் சேர்ந்து கணவனை அடித்து துப்பாக்கியால் சுட்டதில் அவரால் சுயமாக எழுந்து நடமாட கூட முடியவில்லை.ஆகையால்,...
R Rajaram
இளமையிலிருந்தே நாட்டுபற்றுள்ளவனாக வளர்ந்த நான் நாடு பலத் துறைகளில் பின்னடைவில் உள்ளதைக் கண்டு நாட்டிற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று, அன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பெறுப்பை ஏற்றேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அரசியல் என்பது ஒரு… …. வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். அதனால் எந்த பணியும் செய்யாமலிருந்த நான் 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “இந்தியா ஃபஸ்ட்” மாத இதழின் ( INDIA FIRST TAMIL MONTHILY ) முதல் பிரதி வெளியீட்டில் அதன் அடிமட்ட தொண்டன் பொறுப்பிலிருந்து விலகிவதாக தெரிவித்தேன்.
அன்றைய முதல் பிரதியில், நாம் 21-ஆம் நூற்றாண்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு ஒளிமயான எதிர் காலத்தை உருவாக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் சிந்தனை வளமும், செய்யத்தகு ஆற்றலும் ஆக்க சக்திக்குப் பயன்பட வேண்டும். அப்போதுதான் நன்மைகள் விளையும், நடுவளம் பெரும் இந்தியா ஃபஸ்ட் என்று அனைத்துத் துறைகளிலும் நாம் மார்தட்டிக் கொள்ளமுடியும்.
அதைவிடுத்து நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தீயசக்திகளாய் விசுவரூபமெடுத்து அழிவு சக்திக்குப் பயன்படும்போது நாட்டுப்பற்று குறையும், பிரிவினைவாதம் மேலோங்கும்; வன்முறை, தீவிரவாதம் தலைவிரித்தாடும். அதன் நச்சுவேர்கள் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சீரழிக்கும். ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி நாட்டின் வலிமை என்ற தூண்களை அசைத்துப்பார்க்கும் நாடு பின்னடைவை நோக்கிக் செல்லும் இதை வளர்ந்து வரும் இளையதலைமுறையினருக்கு நாம் எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இதற்கு காரணம்..!? கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்குப் பலவிதமான அச்சுறுத்தல்களைத் தந்திருக்கின்றன; தந்து கொண்டிருக்கின்றன. இன்று ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி அடியெடுத்து வைக்காமல் இளைஞர்களின் பயணம் வேறுதிசை நோக்கி சென்று என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவர்களைச் சரியானபாதைக்கு அழைத்துச் செல்கின்ற திசைகாட்டும் கருவியாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் இருக்கின்றோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த சிந்தனை நோக்கோடு மனிதநேயத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்த நாடு நம்நாடு. ஆனால், இன்று நாம் சாதி, மத இன உணர்வுகளால் இரணகளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
-என உரக்கப் பாடியவர் “மகாகவி பாரதி. ஆனால், இன்று கல்வி என்பது கடை வியாபாரக்காகிவிட்டது.
காசில்லை என்றால் கல்விக் கண் திறக்காது ஏழைகளுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்குத் தூண்களாய் நிற்க வேண்டிய துறைகள் அனைத்திலும் லஞ்சமும், ஊழலும் பல்கிப் பெறுகிச் சீர்கேடுகளால் செல்லரித்திக் போயிருக்கின்றன. காலத்தின் விரயத்தை மட்டுப்படுத்துகின்ற தகவல் தொடர்பு சாதனங்களும் மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் இளைய தலைமுறையை திசை திருப்பிவிடுகின்ற காரியத்தில் தான் மும்முரம் காட்டுகின்றனவே தவிர அவர்களது சிந்தனை வளத்திற்குத் தீனிபோடுகின்ற வகையில் காரியமற்றவில்லை.
அடுத்து அரசியல் அமைப்பில் அங்கம் வகிப்பர்கள் தொண்டுள்ளமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களாக இருந்தால்தான் மக்களுக்குச் சிறந்த முறையில் செவ்வனே பணியாற்றமுடியும். ஆனால், இன்று அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. மேலும் அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் சுயநலவாதிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர். இதற்கு மேல் வன்முறை கலாச்சாரம் அரசியலை ஆட்டிப் படைக்கின்றது. இதனால் நல்லவர்களும், வல்லுநர்களும் அரசியலை விட்டு ஒதுங்கிப் போய்க்கொண்டுள்ளனர்.
அடுத்து விளையாட்டுக்கள் மீதான வணிகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கம், திறமையான சாதாரண வீரர்களை விட பண பலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், காஸ்ட்லி பயிற்சி முகாம்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை விளையாட்டை அடித்தட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, ஒரு பணக்கார வர்க்கத்தின் கேளிக்கையாக மாற்ற விளையாட்டு வீரமில்லா பணக்காரவீட்டு களியாட்டமாகி விட்டது.
இப்படி அரசியல், கல்வி, விளையாட்டு, தொழில்வளர்ச்சி மற்றும் விவசாயம் என்று எந்த துறையை நாம் எடுத்தாலும் தீய சக்திகளின் ஆதிக்கமே மேலோங்கி நின்று நல்லகாரியங்கள் நடைபெறுவதற்குத் தடைக்கற்களாய் நிற்கின்றன. ஆகையால் அனைத்துத் துறைகளிலும் இருக்கின்ற தீயவைகளைச் சுட்டிக்காட்டிச் சுட்டெரித்து நல்லவைகளுக்குப் புகழாரம் சுட்டுகின்ற கடமையை இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் நிச்சயம் செய்யும்.
“நாடென்ன செய்தது நமக்கு என்பதை விட நாமென்ன செய்தோம் அதற்கு!” என்று வளரும் இளைய சமுதாயத்தினரிடையே சிந்தனையைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கின்ற இதழாக இந்தியா ஃபஸ்ட் கண்ணுங்கருத்துமாக செயல்படும்.
நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம் பேஸ்புக்கில் இளம்பெண்களில் ஆபாச புகைப்படங்கள், கிளுகிளுப்பான படங்களை பதிவிட்டு, உல்லாசமாக இருக்கலாம் என பதிவிட்டு...
திருப்பூர் மாவட்டம், ஓட்ட சமுத்திரம் புறவழிச்சாலையில் உள்ள சலக்கரை அருகே சரவணகுமார் என்பவர் கடந்த 15-ஆம் தேதி தைப்பொங்கல் இரவு 8 மணி...
WAR-BURG என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ‘‘டிரேடர் டைட்டன் விஐபி 46” என்ற வாட்ஸ்அப் செயலி மூலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்...
2017 ஏப்ரல் வரை எப்படி இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தோமோ, அதுபோல் ஒன்றிணைந்து விட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்”...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமம், விஜய் நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் திருக்கோயில் மகர லக்னத்தில்...
கணவனை ஏமாற்றி 2 கல்லூரி மாணவர்களுடன் புதுமணப் பெண் உல்லாசமாக இருந்ததை அலைபேசியில் வீடியோ எடுத்து தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்த பெண்...
“இணைவோம் இயற்கையுடன்” என்ற யூடியூப் பார்த்து உடல் எடை குறைக்க முயன்ற கல்லூரி மாணவி ரத்தமா வருதுபா, என்னைய காப்பாத்துப்பா என தந்தையை...
10000 போடுபவர்களுக்கு 20000 கிடைக்கிறது. 20000 போடுபவர்களுக்கு 40000 கிடைக்கிறது. ஏன் ஒரு லட்சம் போடுபவர்களுக்கு கூட 2 லட்சம் கிடைக்கிறது. ஆனால்...
மத்திய தணிக்கை வாரியம், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் கே.வி.என்.புரோடக்ஷன் தயாரித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ்...