தெலங்கானா நிர்மல் மாவட்டம், பெம்பி மண்டலத்தில் நேற்று மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மின்சுற்றுக் கோளாறு காரணமாக சுமார் 12 ஏக்கர் மக்காச்சோளப் பயிர் முற்றிலுமாக எரிந்து சாம்பலான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது நாடு முழுவதும் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், பெம்பி மண்டலத்தில் நேற்று மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மின்சுற்றுக் கோளாறு காரணமாக சுமார் 12 ஏக்கர் மக்காச்சோளப் பயிர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அந்த விவசாயிகளுக்கு, இது வெறும் பயிர் இழப்பு மட்டுமல்ல, வாழ்வாதார இழப்பு, பல மாதக் கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
https://x.com/AntaraonX/status/2049681727304688025?s=20
ஊடகங்கள் புறக்கணித்த நிலையில் அமைச்சர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை, எதிர்க்கட்சிகளிடமிருந்து எந்தக் குரலும் இல்லை என்பது தான் வேதனையான விஷயமாகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது நாடு முழுவதும் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.