தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராகப் ரித்திகா ஸ்ரீ தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மாநில நடுவர் தேர்வு விண்ணப்பங்களில் ‘இதர’ பாலினம் என்ற புதிய பிரிவைச் சேர்த்தது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
சேலத்தைச் சேர்ந்த ஆர். முத்துராஜ் என்ற பெயரில் பிறந்த திருநங்கை ரித்திகா ஸ்ரீ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தவர். மொஹாலியில் கால் செண்டரில் இருந்தபோது ஐபிஎல் பார்த்து நடுவராக ஆர்வம் கொண்டார். அதனை தொடர்ந்து, நடுவர் பணிக்கு வழிகாட்டுதல் குறித்து ரித்திகா ஸ்ரீ, “சமூக ஊடகங்கள் வழியாக சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தைத் தொடர்புகொண்டேன்.
நடுவர் குழுத் தலைவர் யூ. ஜெயராமன் முக்கியமாக வழிகாட்ட ஆர். பார்த்தசாரதி, வி. சாந்தி பூஷன் ஆகியோர் நடுவர் பணி அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளனர். சிடிசிஏ லீக்கில் நடுவராகப் பணியாற்ற அங்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. “பார்வையாளராகவே செல்ல விரும்பிய அவருக்கு உள்ளே நுழைய மறுக்கப்பட்டதுடன், மனதைப் புண்படுத்தும் கருத்துகளையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
தற்போது அவர் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக வரலாறு படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது திருநங்கை புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.