தர்மபுரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொலை செய்த கணவன் தலைமறைவானார். இதனை தொடர்ந்து காவல்துறையின் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஜெல்திம்மனூர் பகுதியை சேர்ந்த விவசாயி பாக்யராஜ். இவரது மனைவி நிவேதிதா. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுருவிற்கும் நிவேதிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனையறிந்த கணவர் பாக்யராஜ் கண்டித்து தவறான தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத நிவேதிதா தொடர்ந்து சிவகுருவுடன் பேசி பழகி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நிவேதிதா கோபித்துக்கொண்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் ஊர் பெரியவர்கள் முன் சமாதானம் பேசி மனைவியை குடும்பம் நடத்த வீட்டுக்கு பாக்யராஜ் அழைத்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு படுக்கையறையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த பாக்யராஜ் நிவேதிதாவின் கழுத்தை காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து பஞ்சப்பள்ளி காவல்துறையின் சம்பவ இடத்திற்குச் சென்று நிவேதிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.