வீட்டை கட்டிப் பாரு, கல்யாணத்தை நடத்திப் பாரு என்று சொல்வதுண்டு. இவை இரண்டுமே காலங்காலமாய் நிலைத்து நிற்பதும் அவசியம். அப்படிட்ட கல்யாணம் என்பது குடும்ப கௌரவம், சமுதாய அங்கீகாரம் மற்றும் இரு குடும்பங்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்த வரன் பார்ப்பது, ஜாதகம் அல்லது மனப் பொருத்தம் பார்த்து, இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கலாம் அல்லது அவள் விழிப்பட்டு என் இதயம்.. அவள் போகும் பாதை… என்னுடைய கால் தடங்களாக… என்னை அவளிடம் அழைத்து செல்ல… இரு மனங்கள் ஒரு மனங்களாக ஒன்றிணைந்து பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி நடைபெற்ற காதல் கல்யாணம் நடக்கலாம்.
இரண்டு ஆன்மாக்கள், இரண்டு உயிர்கள், இரண்டு உடல்கள் மற்றும் இரண்டு மனங்கள், ஒரு வாழ்நாள் உறவில் ஒன்றிணைவது பெற்றோர் அல்லது உறவுகள் பார்த்து நடத்தி வைக்கும் கல்யாணமாக இருந்தாலும், இரு மனங்கள் ஒன்றிணைந்து செய்த காதல் கல்யாணமாக இருந்தாலும் சரி கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை நம்முடைய முன்னோர் சொல்வதை போல கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும்.
கணவன் கண்களில் நீர் வழிந்தால் உதிரம் வடிக்கும் மனைவிகள் மற்றும் மனைவி மழையில் நனைந்தால் கணவனுக்கு காய்ச்சல் அடிக்கும். ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் உண்டு. அதுபோலத் தான் குடும்ப கப்பலும் புரிதல் என்ற அடிப்படை வேண்டும்.இப்படிட்ட குடும்பம் என்னும் கப்பலில் புரிதல் இல்லாமல் இருக்கும்போது குடும்ப வன்முறைகள் வெடிக்க திசைக்கொரு ஒரு பக்கம் பிரிந்து விவகாரத்துகள் பெறுகின்றனர். இவர்களுக்கு நடுவில் நிற்கும் குழந்தைகள் படும் பாடு சொல்லில் அடங்காது.
தனது உச்சக்கட்ட சினிமா கேரியரில், 100 கோடியில் சம்பளம் மற்றும் பிரம்மாண்டமான புகழை உதறிவிட்டு, மக்களுக்காகப் பணியாற்றவே அரசியலில் களமிறங்கிய விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் தொடங்கிய முதலே, சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக இயங்கி வருகிறது. தந்தை சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் விஜய் நடிக்க பிரசாத் மற்றும் அஜித் ஈடுகொடுக்க முடியாமல் தொடர் தோல்வி படங்களை கொடுத்து கொண்டிருந்தார். 1996- ஆம் ஆண்டு வெளியான விக்ரமன் எழுதி இயக்கிய ஆர்.பி. சௌத்ரி தயாரித்த பூவே உனக்காக விஜய்யின் கேரியரில் முதல் பெரிய திருப்புமுனை. தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் 270 நாட்களுக்கு மேல் ஓடியது.
அப்போது, இலங்கையை பூர்வீகமாக கொண்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கம் மகள் சங்கீதா ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்த பிறகு விஜய்யின் தீவிர ரசிகையாக மாறியுள்ளார். ரசிகை சங்கீதா லண்டனில் இருந்து விஜய்க்கு பலமுறை கடிதங்கள் அனுப்ப பதிலுக்கு நடிகர் விஜய்யும் அவருக்கு கடிதங்கள் அனுப்பினாராம். அப்போது லண்டனுக்கு வரும்போது உங்களை சந்திக்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னைக்கு குடும்பத்துடன் ஒருமுறை வந்த சங்கீதா, விஜய்யின் சூட்டிங்கில் அவரை சந்தித்துள்ளார். அப்போது சங்கீதாவின் அழகில் மயங்கிய விஜய் காதலிக்க தொடங்கியிருக்கிறார். பிறகு அடிக்கடி லண்டனுக்கு சென்று சங்கீதாவை பார்த்து வந்துள்ளார். அதேபோல சங்கீதா லண்டன்ல பிறந்து வளர்ந்தாலும், டிரெடிஷனலா வளர்ந்ததாலே கடை கடையா அலைஞ்சு திரிந்து விதவிதமான கிரீட்டிங் கார்ட், மோதிரம், வெள்ளிக் கொலுசு என கிஃப்ட் வாங்கி கொடுத்து விஜய் மயக்கியுள்ளார். காதலிக்க, கல்யாணம் பண்ண பொண்ணு தேடற ஒவ்வொரு பையனுக் குள்ளேயும் இருக்கிற ஸ்கேல், `நம்ம அம்மா மாதிரி ஒரு பொண்ணு வேணும்’ங்கிறதுதான். விஜய் எதிர்பார்த்தது போலவே அதே பாசம், கோபம், கனிவு, கண்டிப்புனு சங்கீதா அவருக்கு இன்னொரு அம்மா போல இருந்துள்ளார்.
அப்போது தனது காதலை விஜய் வெளிப்படுத்த விஜய்யின் அப்பா சந்திரசேகர், ஷோபா ஆகியோர் சங்கீதாவின் பெற்றோரிடம் என் மகனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். திருமணம் என்பது பூலோகத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட போல லண்டனில் நிச்சயதார்த்தமும், 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது.
இருவேறு மனங்கள் ஒருசேர சங்கமித்து, இரு உடல் ஓர் உயிராய் கலந்த சங்கீதா – விஜய் தம்பதியினர் வாழ்க்கையின் சரிபாதியை பகிர்ந்து தேனின் சுவையில் மதி மயங்கி நிற்கும் வண்டினை போல… அவன் தோட்டத்தில் அவள் மலராக 2000-ஆம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும் 2005-ல் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்பாக விஜய் இருந்து வந்துள்ளார். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்துகொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமலே இருந்து வந்தார்.
திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சூழலில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மகன் சஞ்சய் கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது ‘சிக்மா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மகள் திவ்யா தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். ஒரு நடிகனை நடிப்பில் மயங்கி அவருடன் காதலில் விழுந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இரண்டு குழந்தைகள் திருமண வயதில் இருக்கும்போது 26 ஆண்டு திருமண வாழ்வுக்கு பிறகு கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார் என்பதே மிகுந்த வேதனையான விஷயமாகும்.
இது தொடர்பாக விஜய் மனைவி சங்கீதா கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகியுள்ளனர். அந்த புகார் மனுவில், தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அவருடனான தொடர்பை துண்டித்துவிடுவதாக உறுதியளித்த கணவர் விஜய், இன்று வரை அந்த நடிகையுடனான உறவை தொடர்ந்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 2021- பிப்ரவரி 2022 -ல் சமாதானம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இந்த விவகாரத்தை மேற்கொண்டு கொண்டுசெல்ல அப்போது விரும்பவில்லை. ஆனாலும், எனது கனவர் நடிகையுடனான அந்த உறவை கைவிடுதாய் இல்லை. வீட்டிற்குள்ளேயே நான் தனித்து விடப்பட்டேன்.
மேலும் அந்த நடிகை, தனது கணவர் விஜய்யுடன் பல்வேறு பொது இடங்களுக்கு செல்வதும் அங்கு அவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்னிடம் எந்தவித வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. இந்த திருமணத்தை மீறிய உறவால், வீட்டில் இருந்த எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. நிதி தொடர்பான எனது சுதந்திரமும் முடக்கப்பட்டது.
எனவே, இந்த திருமண உறவை உடனடியாக முடித்து வைக்கவேண்டும். வழக்கு நடைபெறும் போது மாதாந்திர ஜீவனாம்சமும், வழக்கு முடிவுக்கு வந்த பிறகு முழு ஜீவனாம்சமும் தரவேண்டும்’ என அந்த மனுவில் சங்கீதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தனி அறையில் வைத்து விசாரிக்குமாறும் இந்த விவகாரத்தை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், யூடியூப் சேனல்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 20-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணையில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உச்ச நடிகராக இருந்து, முதலமைச்சர் கனவோடு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்.. தனிமனித வாழ்வில் தனது மனைவி மீது குடும்ப வன்முறையை நிகழ்த்தியும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் கணவன் மனைவி வாழ்க்கையில் எவ்வளவோ விவாகரத்து வழக்குகள் நடக்கலாம். ஆனால் சங்கீதா -விஜய் விவாகரத்து வழக்கு அப்படியல்ல. லண்டன் தொழிலதிபர் சொர்ணலிங்கம் மகள் இலங்கை தமிழ்ப் பெண் சங்கீதா சொர்ணலிங்கம் ஒரு நடிகனின் நடிப்பில் மயங்கி அவரின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்தவர். விஜய் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்ததில் மனைவி சங்கீதாவின் பங்கு முக்கியம். ஆரம்பகாலங்களில் விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதா ஆடை வடிவமைப்பில் உதவி செய்துள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும், குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து கொண்டு விஜய்யின் வெற்றியில் சங்கீதாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
ஆனால், ஒரு நடிகனை நம்பி காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் வயதில் தனது கணவர் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் இந்த வழக்கை தனி அறையில் வைத்து விசாரிக்குமாறும் இந்த விவகாரத்தை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், யூடியூப் சேனல்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அந்த மனுவில் தெரிவித்து இருப்பது எந்த ஒரு பெண்களுக்கு ஏற்படக் கூடாது.