“எனக்கு தளபதி என்றால் அது M. K. Stalin தான். இப்போ நிறைய திரை தளபதிகள் வந்துகிட்டே இருக்காங்க. அரசியலில் ஓட்டு பிரிச்சு உள்ளே வந்து ஆட்டையை போடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் என ஜல்லிக்கட்டு ஜூலி ஆவேசமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் 2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, போராட்டக் களத்தில் தொடர்ந்து முன்னின்று முழக்கமிட்டதன் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜூலி. சமூக வலைத்தளங்களில் தன் கருத்துகளை தைரியமாக சொல்லும் நபராக ஜூலி மாறி இருக்கிறார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “வெல்லும் தமிழில் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஜூலி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “எனக்கு தளபதி என்றால் அது M. K. Stalin தான். இப்போ நிறைய திரை தளபதிகள் வந்துகிட்டே இருக்காங்க. அரசியலில் ஓட்டு பிரிச்சு உள்ளே வந்து ஆட்டையை போடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் இது தமிழ்நாடு. இது திராவிட கோட்டை. இங்கே எந்த ஸ்டார் கடப்பாரையையும் வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது,” என்று அவர் கடுமையாக பேசினார். இந்த கருத்து நேரடியாக நடிகர் விஜயை குறிக்காமல் கூறப்பட்டாலும், அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் இந்த பேச்சு விஜயை நோக்கி கூறப்பட்டதாகவே கருதி சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கினர்.
தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூழ்நிலை மெல்ல சூடுபிடித்து வரும் நிலையில், பிரபலங்களின் அரசியல் கருத்துகள் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி பெரிய விவாதமாக மாறி வருகின்றன. அந்த வகையில், ஜூலி பேசிய “திராவிட கோட்டை” குறித்த இந்த கருத்தும் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்படும் அரசியல் கருத்தாக மாறியுள்ளது.