தமிழகம் ரிதன்யா தற்கொலை, கேரளாவை சேர்ந்த விபன்சிகா என்கிற பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் தற்கொலை போன்ற சம்பவ அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பலரும் மீள முடியாத நிலையில் இன்று தமிழகத்தில் வரதட்சணை கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவரே, இந்த கொடுமையை அரங்கேற்றி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கி.மு. 200 -ஆம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பியாவில் தோன்றிய வரதட்சணை உலகின் பல நாடுகளில் மறைத்து போனாலும் நாம்நாட்டில் தொடர்ந்து பல உயிர் பலிகளை வாங்கிக் கொண்டே உள்ளது. ஆரம்ப காலத்தில் மகளின் நிதி பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் மற்றும் அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.

பெண்களுக்கு எதிராக பல உயிர் வாங்கும் இந்த வரதட்சணை 1961, மே 1-ந் தேதி முதல் வரதட்சணைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும், இந்தச் சட்டத்தால், வரதட்சணைக் கொடுமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்ததோ தவிர இன்றும் பல உயிர்களை காவு வாங்கிக்கொண்டேதான் உள்ளது. மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடுத்த வரதட்சணை புகாரில், தலைமறைவாக உள்ள காவலர் மற்றும் அவரது தந்தை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் வரதட்சணை பெயரில் நடக்கும் வன்கொடுமைகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வரதட்சணை கொடுமைகளை தடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவரே, இந்த கொடுமையை அரங்கேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கப்பிரியா எனும் இளம் பெண்ணுக்கும், மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்த காவலர் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடந்து இருக்கிறது. திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர்.குறிப்பாக வரதட்சனையை காரணம் காட்டி தங்கப் பிரியா மீது குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் தங்கப் பிரியா மீதான தாக்குதல் உச்சத்தை தொட்ட நிலையில், தங்கப் பிரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக உள்ள கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக உள்ள அவரது தந்தை செந்தில்குமரன், பூபாலனின் தாய் விஜயா, தங்கை அனிதா என 4 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
திருமணத்தின்போது 60 சவரன் அளவுக்கு தங்க நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஆனால் இன்னமும் வரதட்சனை வேண்டும் என்று கேட்டு தன் மீது பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தங்கப் பிரியா புகார் கொடுத்து இருக்கிறார். இந்த புகாரையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை 4 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து இருக்கின்றனர்.

இதற்கிடையில், காவலர் பூபாலன் மற்றும் அவரது தங்கை அனிதா பேசிக்கொண்டதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தான் எப்படி மனைவி தங்கப்பிரியாவை தாக்கினேன் என்பது குறித்து பூபாலன் விளக்கியுள்ளார். இதை கேட்டு தங்கை அனிதா சிரிக்க, இருவரும் அதை குற்றம் என்று கருதாமல் விவாதித்து இருக்கிறார்கள். தான் அடித்ததில் தங்கை பிரியாவின் கழுத்து, வாய், முகம் உள்ளிட்டவற்றில் கடுமையான சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் பூபாலன் கூறி இருந்தார். இதில் பூபாலனின் தந்தை மற்றும் தாய் குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் சோபரவலாக பகிரப்பட்ட நிலையில், தற்போது 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் ரிதன்யா தற்கொலை சம்பவ அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பலரும் மீள முடியாத நிலையில் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்த கேரளாவை சேர்ந்த விபன்சிகா என்கிற பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கைப்பட பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று தமிழகத்தில் வரதட்சணை கொடுமைகளை தடுக்க வேண்டிய காக்கிசட்டை அணிந்த கொள்ளையர்களால் 7 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண், இந்த கொடுமையை அரங்கேற்றி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.