கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டம், அரசடிகுப்பம் அஞ்சல், அழகப்பசமூத்திரம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் ரிச்சர்ட் மற்றும் மகள் தேவஜெய ஸ்ரீபிரியா. இவருடைய அப்பாவும் அம்மாவும் சிறிய வயதில் இறந்து விட்டார்கள். ஆகையால், இவர்கள் பாட்டி துணையோடு சொந்த உழைப்பில் சம்பாதித்து கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்ட படித்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.
இவர் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பு படிக்கும் போது விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வட்டம் மேல்பாதி சொரணாவூர் வன்னியர் கிராமத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகன் வசந்தகுமார் என்பவர் காதல் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஸ்கான் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது, தேவஜெய ஸ்ரீபிரியாவை அழைத்து வந்த வசந்தகுமார் ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக தெரிகிறது. மேலும் இரண்டு மாத காலம் வசந்தகுமார் வீட்டில் வைத்திருந்து தனது தாய் தந்தை அண்ணன் உள்ளிட்டு அனைவரோடு இணைந்து தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டும் சாதி ரீதியான பெயரை சொல்லி இழிவு படுத்தியும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
அண்ணனுக்கு தெரிந்தால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அண்ணனுக்கு தெரியாமல் தனது தகப்பனின் அக்கா அதாவது மாணவியின் அத்தை துணையோடு அந்த வீட்டில் நடந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் 1 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார் என அவருடைய உடலை விழுப்புரத்தில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தேவஜெய ஸ்ரீபிரியாவின் அண்ணன் ரிச்சர்ட் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று கதறி அழுதனர். மேலும், தேவஜெய ஸ்ரீபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் நீதி கிடைக்கும் வரை உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பால்ராஜ் மற்றும் மக்கள் அதிகாரத்தின் கடலூர் மாவட்ட செயலாளரும் மாநில இணைச் செயலாளருமான தோழர் பாலு அவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கலைமோகன், பண்ருட்டி அருள் செல்வன் உள்ளிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சிறையில் அடைத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் போராட்டம் நடத்திக் கொண்டு இ க்கின்றனர்.