நில அளவைத் துறையில் அரசாணை எண்கள் 297, மற்றும் 420 ஐ உடனடியாக ரத்து செய்ய கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜூலை 8 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, அரியலூர் மாவட்டம் மையம் சார்பில், நில அளவைத் துறையில் புல உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது சம்பந்தமான தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 420 ஐ , அரசு உடனே திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் , அரியலூர் மாவட்ட தலைவர் ஆ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அரியலூர் மாவட்டச் செயலாளர் அடைக்கல பிரவீன் , கோட்ட தலைவர் நா. சுதாகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
குறுவட்ட நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், நில அளவைத் துறையில் அரசாணை எண்கள் 297, மற்றும் 420 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கோட்ட தலைவர் சங்கர் சுரேஷ் நன்றி கூறினார்.