சமீபத்தில் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்து இளம் பெண் வழக்கறிஞரின் செய்த செயல் , ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்திய காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜசேகர் என்பவரின் மகள் அனீஷா கடந்த 5 வருடங்களாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்று வந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏகாட்டூர், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி, வந்தார். சமீபத்தில் தன்னுடைய படிப்பை வெற்றிகரமாக முடித்த அனீஷா, பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஒரு ஜிம்மிற்கும் அனீஷா உடல் ஆரோக்கியத்திற்க்காக தினசரி பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். அங்கு ஜிம்மில் நித்தியானந்தம் என்பவரிடம், பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகி காதலர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, அனீஷா நித்தியானந்தத்திற்கு வீடியோ கால் செய்து, தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்லி உள்ளார். பிறகு உடனே வீடியோவை அப்படியே ஆன் செய்தபடியே வைத்துவிட்டு, தன்னுடைய அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த காட்சியை வீடியோவில் பார்த்த நித்தியானந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக அனிஷா தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர்களுக்கு தகவல் தந்துள்ளார். ஆனால், பாதுகாவலர்களுக்கோ அனிஷா தங்கியிருக்கும் வீடு எது என தெரியாததால், அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை செய்துள்ளனர். இறுதியில் அனீஷா தங்கி இருந்த வீட்டை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அனீஷா உடலை கைப்பற்றிய காவல்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனீஷாவின் இறப்பு செய்தி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் மரண செய்தியை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சிகள் அனைவரின் நெஞ்சையும் கரைய வைத்தது.மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கேளம்பாக்கம் காவல்துறையினர் அவரது காதலர் நித்தியானந்தம் மற்றும் பெண்ணின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனித வாழ்வில் துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதியாகும். இன்பத்தைப் போலவே துன்பமும் கடந்து போகும் என்பதை உணர்ந்து, மன உறுதியுடன் அனைத்துச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதே வாழ்வியலின் அடிப்படைத் தத்துவம். மேலும் தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது.
அப்படி தங்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் உண்டானால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள் மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது). ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு. AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 ) என்றும் எண்களை அழைத்து தற்கொலை செய்து கொள்வதில் இருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.