பிரியாணி மாஸ்டருடன் கள்ளக்காதல் கணவனை கொலை செய்ய ரூ.15 லட்சம் பேரம் பேசி, 2 லட்சம் அட்வான்ஸ் தந்து கூலிப்படை ஏவிய மனைவி பெரும் அதிர்ச்சியில் காஞ்சிபுரம். இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன.
இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் கிராமத்தில் வசித்து வரும் பிரியாணி கடை வைத்திருக்ம் தம்பதி அரிகிருஷ்ணன் – பவானி. ஹரிகிருஷ்ணன் தனது பிரியாணி கடையில் மனைவி பவானியை உதவியாக வைத்து இருக்கிறார்.

பிரியாணி கடைக்கு தேவையான ஆட்டுக்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க அடிக்கடி வெளியே செல்ல வேண்டி வரும் என்பதால் ஹரிகிருஷ்ணன் மனைவி பவானியை கடையில் விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே கடையில் வேலை பார்த்து வந்த பிரியாணி மாஸ்டர் மதன்குமார் என்ற இளைஞருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது தகாத உறவாக மாறி, இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த கள்ளக்காதல் ஹரிகிருஷ்ணனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால், அந்த கள்ளக்காதல் ஜோடிக்கு தெரியாமல் கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்து, கண்காணித்தார். அப்போதுதான், பவானியும், மதன் குமாரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்ததை கண்டு ஹரிகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார் உடனே மதன்குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டு மனைவி பவானியை கண்டித்தார்.
இதனால் கள்ளக்காதல் ஜோடி ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் கணவரை கொன்றுவிடுவது என்று பவானி முடிவுக்கு வந்தார். இதுகுறித்து மதன்குமாரிடம் பேசினார். இறுதியில், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை அணுகி ரூ.15 லட்சம் பேரம் பேசி, 2 லட்சம் அட்வான்ஸ் தந்தனர்.
சம்பவத்தன்று, மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். உடனே கூலி படையினர் ஹரிகிருஷ்ணனுக்கு போன்செய்து, “உன்னை கொல்வதற்கு உன் மனைவி ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ.2 லட்சம் தந்திருக்கிறார். நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அரண்டுபோன ஹரிகிருஷ்ணன் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு ஓடி. தனக்கு நடந்த கொலை முயற்சி குறித்தும் புகார் தந்தார். இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை பிடித்து காவல்துறையினர் விசாரித்தது.. அப்போது, கூலிப்படையை ஏவி ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை இருவருமே ஒப்புக்கொண்டனர். பிறகு, கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் உட்பட கள்ளக்காதல் ஜோடி என மொத்தம் 5 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டு வந்தாலும், பெரும் அதிர்ச்சியை காஞ்சிபுரத்தில் ஏற்படுத்தி வருகிறது.