கோழிப்பண்ணையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் புகார் மனு கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..
கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்தின் உட்பட்ட ஜே கிருஷ்ணாபுரம் வஞ்சிபுரம் ஊராட்சி குடியிருப்பில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி மக்கள் இந்தப் பகுதியில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்த கோழி பண்ணை அமையும் பட்சத்தில் அருகில் உள்ள விவசாயிகளின் மதிப்பிடங்கள் வஞ்சிபுரம் கிராமம் மற்றும் ஜே கிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும்.

மேலும் ஈக்கள் தொல்லை, துர்நாற்றம், டெங்கு என்று சொல்லக்கூடிய காய்ச்சல் பிரச்சனைகள், நிலத்தின் விலை மதிப்பு சரிவு மற்றும் நிலத்தடி நீர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் இந்த கோழிப்பண்ணையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் திரளாக ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் புகார் மனு கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..