பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா- “இது நம்ம ஆட்டம் 2026” ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி நேற்று (25.01.2026) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம். உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தினை வலுப்படுத்தும் நோக்கில் 22.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 போட்டிகள் நடத்திட உத்தரவிட்டு உள்ளார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25.1.2026 மற்றும் 26.1.2026 ஆகிய நாட்களில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம். ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1000/-பரிசுத்தொகையும், வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவில் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/-பரிசுத்தொகையும், மாநில அளவில் அணிப்பிரிவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.75,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.25,000/-பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபாடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

விளையாட்டு துறையின் சிறப்பான முன்னெடுப்புகளால் நமது விளையாட்டு வீரர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்துவதால் வருங்கால இளம் தலைமுறையினரின் மன திறனும், உடல் திறனும் வலிமையும் பெறும். கிராமப்பகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள விளையாட்டு வீரர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்த்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் நிகழ்த்திட உயர் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா- “இது நம்ம ஆட்டம் 2026” ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி நேற்று (25.01.2026) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், விஜயகுமார், கே.பாரதி, எஸ்.டி.சி. கல்லூரி துணைமுதல்வர் எஸ்.புவனேஸ்வரி, கோவை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சித்ரா மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடைப்பந்து பயிற்சியாளர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் கலந்து கொண்டனர்.