கேரள இடுக்கி மாவட்டம் குமுளியைச் சேர்ந்த ரஞ்சிஷ் ஒரு பேருந்து நடத்துனர். இவருக்கு கோழிமலையில் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்குச் சென்று அங்கு ஒருவருடன் அவரது மனைவி ‘லிவ்-இன்’ (திருமணம் சாராத கூடிவாழும்) உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சிஷ் தனது வயதான பெற்றோருடன் குழந்தையை எந்த ஒரு குறையும் வைக்காமல் கண்ணை இமை காப்பது போல காத்தது மட்டுமின்றி வயதான வளர்த்து வந்தார்.
சமீபத்தில், ரஞ்சிஷ் மனைவி வளைகுடா நாட்டில் இருந்து கோழிமலையிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். அதன் பின்னர் ரஞ்சிஷ் மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் குழந்தையின் பராமரிப்பு உரிமை வேண்டி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவில் அந்தக் குழந்தையின் பாதுகாப்பை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு ரஞ்சிஷ் மனதளவில் முற்றிலும் உடைந்து போனார்.

இந்நிலையில் ரஞ்சிஷின் முன்னாள் மனைவியின் காதலர் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அனுப்பிய ஒரு வீடியோ பார்த்து குழந்தை தன்னை விட்டு பிரிந்து விட்டதே என்ற விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சை அளித்தபோதிலும், பயனில்லாமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குழந்தை பராமரிப்பு உரிமைச் சட்டக் கட்டமைப்பு குறித்து இணையத்தில் ஒரு சூடான விவாதத்தை எழுப்பியுள்ளனர்.
இது நீதியல்ல; இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கொடூரச் செயல். 8 ஆண்டுகளாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு, வேறொரு குடும்பத்தைத் தொடங்கிய ஒரு பெண்ணிடம் நீதிமன்றம் எப்படி அக்குழந்தையை ஒப்படைக்க முடியும்? குழந்தையின் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த ஒரே ஒரு பெற்றோரைச் சிதைக்கும்போது, அங்கு “குழந்தையின் நலன்” (best interest of the child) எங்கே இருக்கிறது?.
தாய் குழந்தையைத் திரும்பக் கேட்கும் வரை, தந்தையரை வெறும் ஏடிஎம் (ATM) இயந்திரங்களாகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையாட்களாகவும் மட்டுமே இந்தியக் குடும்ப நல நீதிமன்றங்கள் ஏன் கருதுகின்றன? என இணையவாசிகள் சூடான கேள்விகளை எழுப்புகின்றனர்.
மேலும், ரஞ்சிஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. பாரபட்சமான சட்டங்கள், பொய் வழக்குகள் மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் தாய்க்குச் சாதகமாக அமையும் இதயமற்ற குழந்தை பராமரிப்பு உரிமைத் தீர்ப்புகள் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன என இணையவாசிகள் குமுறுகின்றனர்.