கடந்த வாரம் டேன்டீ விற்பனை மையங்களில் தனியார் தேயிலை தூள் விற்கப்படுவதாகவும் அதனால் டேன்டீ நிறுவனம் நஷ்டம் அடைந்து அதால பாதாளம் நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் இதனால் தாயகம் திரும்பிய மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதித்து அவர்கள் சொல்லொணா துயரம் அடைந்து இருப்பதாகவும் ஒரு நிறுவனம் செய்து வெளியிட்டு அது சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய செய்தியாக பரவியது.
இதனால் வெகுண்டு எழுந்த டேன்டீ அதிகாரிகள் மேற் சொன்ன கடையின் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக சபதம் எடுத்து இருக்கிறார்களாம். சரி என்னதான் நடக்கிறது உண்மை என்ன என்று விசாரிக்க நாம் களத்தில் இறங்கினோம்.
இப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன்டீ தேயிலை விற்பது என்னவோ நூறு கடைகளோ இருநூறு கடைகளோ அல்ல, வெறும் 10 கடைகள் தான் இந்த கடைகளில் கூட டான்டீ நிறுவனம் அமைத்துக் கொடுத்ததோ அல்லது அந்த நிறுவனம் பிற அரசாங்கத் துறையிடம் அனுமதி வாங்கி கொடுத்து நடப்பதோ கிடையாது இவை அனைத்தும் அந்தந்த முகவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப பல இடங்களில் அமைத்துக் கொள்கிறார்கள்.அந்த கடைகள் அமைக்க என எந்த உரிமமோ அல்லது அனுமதியோ தருவதில்லை டேன்ட்டீ நிறுவனம்.
தனி நபரை வெறும் விற்பனை முகவராக நியமிப்பது மட்டுமே டேன்டீ நிறுவனத்தின் வேலை இதற்காக 5000 ரூபாய் டெபாசிட் தொகை பெற்றுக் கொள்வதோடு சரி. ஒருவேளை அந்த விற்பனை முகவர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தால கூட அந்தப் டெபாஸிட் பணம் திரும்பி வராது அது சங்கு தான். சரி அரசு தேயிலையை விற்கலாம் தானே ஏன் தனியார் தேயிலையை விற்கிறீர்கள் என்று சில முகவர்களிடம் கேட்டபோது சார் பிற நிறுவனங்கள் 35% வரை லாபம் கிடைக்கும் ஆனால் டேன்டீ தேயிலைத் தூளை விற்றால் வெறும் 15 % மட்டுமே லாபமாக தருகிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு தேயிலை விற்பதே மிகக் கடினம் ஆகும் என்பதே கடினமான விஷயமாகும்.