ரோடு-ஷோவிற்கு பேச்சாளருக்கு 500 அடி தூரம் முன்புவரை தடுப்பு; தடுப்புகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைக்க வேண்டும். போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் நெறிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டது.
இதில் புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இடிருக்கின்றன.அதில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதியளிக்கப்படும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
இதில் மேலும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, அரசியல் கூட்டங்களில் 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ. 1 லட்சம் வரையும், 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்து கொள்ளும் ளும் கூட்டம் என்றால் ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.8 லட்சம், 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.20 லட்சம் என வைப்புத்தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டடு இருக்கிறது.
ரோடு-ஷோவுக்கான நிபந்தனைகளை பொறுத்தவரை, பேச்சாளருக்கு 500 அடி தூரம் முன்புவரை தடுப்பு; தடுப்புகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைக்க வேண்டும். போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்; பேச்சாளரை மக்கள் பின் தொடர்வதை தடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். ரோடு-ஷோ செல்லும் வழியில் வேறு எங்கு உரை நிகழ்த்தக் கூடாது என்றும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.