மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2024- ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
இந்த சம்பபவத்தன்று நள்ளிரவு, நீலேஷ் பில்லாலா என்ற 25 வயது நபர், பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைகிறார். அங்கிருந்த ஒரு சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, ஒரு மூலைக்கு இழுத்து செல்கிறார். கேமராவின் பார்வையில் படாதவாறு, அங்கு வைத்து அந்த சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்கிறார். பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி செல்கிறார்.

இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களின் கண்டனங்களுக்கும் ஆளாகியது. சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகே, அதாவது அக்டோபர் மாதத்தில்தான் மருத்துவமனை ஊழியர்கள் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
இதை பார்த்து ஒட்டுமொத்த மருத்துவமனையும் அதிர்ச்சியில் உறைந்தது.. உடனடியாக இதுகுறித்து, மருத்துவ அதிகாரி மருத்துவர் ஆதியா தாவர், கடந்த 7-ந் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.