கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் குமாரபாளையம் பஞ்சாயத்து, குருஞ்சேரி மற்றும் பொன்னிய கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட பொதுமக்கள் சம்மந்தப்படட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இன்று காலை குறுஞ்சேரி பிரிவிலுள்ள சாலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.