தமிழகத்தையே நிலைகுலைய வைத்த பச்சிளம் குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிஉத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது.
நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது. அந்தவகையில், கள்ளக்காதலுக்காக பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த குன்றத்தூர் அபிராமியை எளிதில் மறக்க முடியாது. பலவருட காலம் சிறையில் உள்ள.தமிழகத்தையே உலுக்கிய குன்றத்தூர் அபிராமிக்கு இன்று சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.

குன்றத்தூர் என்றாலே முருகன் என்ற பெயர் வரும் ஆனால் கடந்த பல வருடங்களாக அபிராமிதான் நினைவுக்கு வருகிறார். 2018-ஆம் ஆண்டு டிக்டாக் செயலியும், செயலியும் டோர் டெலிவரியும் பிரபலமானபோது குன்றத்தூரை சேர்ந்த விஜய் மனைவி அபிராமியும் டிக்டாக் செயலி மூலம் அபிராமியும் பிரபலமடைந்ததார். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். அபிராமி வசிக்கும் பகுதியிலேயே பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. குழந்தைகளுக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால், அடிக்கடி தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த பிரியாணி கடைக்கு சென்று அபிராமி வந்தார். ஒரு கட்டத்தில் போன் செய்து டோர் டெலிவரி செய்து, பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
அப்படி வீட்டுக்கு பிரியாணி தரும் ஊழியர்தான், சுந்தரம். அப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம் அபிராமி – சுந்தரம் இவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்து கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து விஜய்யின் காதுகளுக்கு இது எட்டியதுமே, குடும்பத்தில் தகராறு வெடித்தது.. சுந்தரத்துடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, 2 குழந்தைகளை குழந்தைகளை சரியாக கவனித்து கொள் என்று அபிராமிக்கு கணவர் அட்வைஸ் தந்தார்.. இதனால் சுந்தரத்துடன் முன்புபோல போனில் கூட பேச முடியாமல் அபிராமி தவித்தார்.

சுந்தரத்துடன் உறவு கொள்ள, இந்த குழந்தைகள்தான் தடை என்றால், அந்த குழந்தைகளையே கொல்ல முடிவெடுத்தார் அபிராமி. இதற்காக கள்ளக்காதலனிடம் சொல்லி தூக்க மாத்திரையை, வாங்கி வர சொல்லி, அவைகளை பாலில் அபிராமி கலந்தார். தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். குழந்தைகளை இரவு தூங்க வைக்கும்போது, மாத்திரை பாலினை குடிக்க வைத்ட்டு கழுத்தையும் நெறித்து கொன்றுவிட்டாள். அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார்.
எப்போதுமே விஜய் வேலைக்கு கிளம்பி செல்லும்போது குழந்தைகள் டாடா சொல்வார்களாம். ஆனால், மறுநாள் குழந்தைகள் இன்னும் விழித்து கொள்ளாததால், விஜய் அவர்களை எழுப்ப சென்றுள்ளார். “குழந்தைகளை எழுப்பினால் நாம் சிக்கிவிடுவோம்” என்று கருதிய அபிராமி, தூங்கும் குழந்தைகளை ஏன் எழுப்பறீங்க என கேட்டு, விஜய்யை சமாளித்து, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் பிணமாக கிடக்கிறார்களே என்ற ஈவு, இரக்கம் ஏதுமின்றி, பிறகு தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, பைக்கில் சுந்தரத்துடன் கிளம்பிவிட்டார். அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த விஜய், அப்போதுதான், 2 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி இருந்ததை கண்டு, தரையில் புரண்டு கதறி அழுத விஜய், இறுதியில் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இரு குழந்தைகளின் சடலத்தையும் பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கை வந்த போதுதான் அபிராமி, குழந்தைகளை கொன்ற விவகாரம் தெரியவந்தது. இந்நிலையில் அபிராமியை தேடி வந்த நிலையில் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பைக்கை விட வந்து இ ருந்தார். அப்போது அவரை காவல்துறை மடக்கி பிடித்து கைது செய்து புழலில் சிறையில் அடைத்தனர். ஆனால், பச்சிளம் குழந்தைகளை கொன்ற விதம்குறித்து அன்று அபிராமி தந்திருந்த வாக்குமூலம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.