சென்னை மீனவர்களின் பூர்விக வாழ்விடங்களை அபகரிக்க நினைக்கும் திமுக MLA வேலு அவர்களின் அராஜகத்தை கண்டித்து போராடும் மீனவர்களுடன் இணைந்து போராட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தயாராகி வருகிறார்.
சென்னை, நொச்சிக்குப்பம், பட்டினம்பாக்கம், முள்ளிக்குப்பம் போன்ற மீனவ கிராம பகுதிகளில் மீனவர்களின் பூர்வீக இடங்கள் இருக்கிறது. இதில் மீனவர்களுக்கு குடியிருப்பு கட்டி தருகிறோம் என்று கூறி அந்த இடத்தில் உள்ள மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் மயிலாப்பூர் தொகுதி MLA வேலு அவர்கள் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், மீனவர்களுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மீனவர் அல்லாதவர்களுக்கு முறைகேடாக கொடுப்பதாகவும் கூறி நொச்சிகுப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரை உள்ள 10 கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் போராடும் மீனவ மக்களை பயமுறுத்தும் வகையில், மயிலாப்பூர் தொகுதி MLA வேலு அவர்களின் தூண்டுதலின் பேரில், போராட்டத்தை முன்னெடுக்கும் மீனவர்கள் மீது காவல்துறை உதவியுடன் பல்வேறு வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதி MLA-வின் அராஜகத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை மீனவர்கள் சந்தித்து மீனவர்களின் பூர்வகுடி இடத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டி தர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், மீனவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை அளிப்பதில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் மற்றும் போராட்டக்காரர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தும் மயிலாப்பூர் தொகுதி MLA வேலு அராஜகத்தை கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கொடுத்தனர்.

கவனத்துடன் மீனவர்கள் கோரிக்கையை கேட்டறிந்த நைனார் நாகேந்திரன் அவர்கள் மீனவர்களின் பூர்விக இடத்தில் வீடு கட்டி தர முயற்சிகளை சட்டப்பேரவையிலும், சட்ட ரீதியாகவும் பாஜக சார்பில் முன்னெடுப்போம், முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய அழுத்தம் கொடுப்போம் என்று உறுதி அளித்தார். மேலும் மீனவர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் தமிழக அரசை கண்டித்து போராடும் மீனவர்களோடு இணைந்து போராட தமிழக பாஜக தயாராக உள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் போராட்டத்தில் நானும் இணைந்து மீனவர்களோடு போராட வருகிறேன் என்ற நம்பிக்கையை மீனவர்களுக்கு அளித்தார்.

இந்த நிகழ்வில், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சே. நல்லதம்பி, பொதுச்செயலாளர் L. பிரவீன்குமார், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மகேஷ் உள்ளிட்ட பல மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் நொச்சிக்குப்பம் முதல் முள்ளிகுப்பம் வரை உள்ள மீனவ கிராம நிர்வாகிகளும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் MLA அவர்களை சந்தித்து, மனு அளித்தனர். அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ். சதீஷ்குமார் அவர்கள் உடன் இருந்தார்.