இரண்டு வருடங்களாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து மனைவியை நான்கே மாதங்களில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியை போல காதல் மனைவியை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரசிக்கும் நாம், நிஜ வாழ்க்கையில் காதல் என்ற உணர்வை எந்த அளவிற்கு உணர்கிறோம்? உலக அழகியே மனைவி என்றாலும் பார்க்க பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்கு பிறகு பழக பழக பாலும் புளிப்பதை போல காதல் தெவட்டும். தமிழ் பழமொழி சொல்வதுபோல், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் அப்படித்தான் ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரங்கேறி இருக்கிறது. காதலித்து திருமணம் செய்த மனைவியை நான்கே மாதங்களில் கொடூரமாக கொலை செய்திருக்கிறான் கணவன்.
தமிழகத்தில் இளம் வயத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் சிலர் கொலை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல ஆங்காங்கே விவாகரத்து சம்பவங்களும் தொடந்து கொண்டுள்ளது. இளம் வயது ஈர்ப்பில் காதலித்து திருமணம் செய்துவிட்டு சில மாதங்களிலேயே பழக பழக பாலும் புளிப்பதை போல அந்த உறவு கசந்தும் விடுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரண். அதே கிராமத்தை சேர்ந்த மதுமிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மதுராந்தகம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், மதுமிதா அடிக்கடி ஆண் நண்பருடன் தனது அலைபேசியில் பேசி வந்துள்ளார். இது சரணுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக காதல் மனைவியை சரண் பலமுறை கண்டித்துள்ளார். மேலும் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் யாருடன் பேசுகிறாய் என்ற கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனாலும் மதுமிதா ஆண் நண்பருடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலையில் மதுமிதாவை சமாதானப்படுத்துவது போல் நடித்து அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியிடம் நைசாக பேசிய சரண் அச்சிறுபாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில் உள்ள மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
யாரும் இல்லாத மலைப் பகுதிக்குச் சென்றபோது ஆண் நண்பருடன் பேசக் கூடாது என சரண் மதுமிதாவிடம் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. ஆத்திரமடைந்த சரண் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார். மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவர்கள் வந்து பார்த்தபோது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவம் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று மதுமிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை பதுங்கி இருந்த சரணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் மனைவியை நான்கே மாதங்களில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியை போல காதல் மனைவியை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.