இந்திய வம்சாவளி 6 வயதான அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பில் சைக்கிள் ஏற்றிய அயர்லாந்து நாட்டில் சேர்ந்த சிலர், தலையை மூடியே இழுத்தும் முகத்தில் குத்தியும் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கே திரும்ப போ என்றும் சொல்லி மிரட்டியுள்ளனர். உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும் வல்லுநர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், அதை நிரப்ப இந்தியர்கள் பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறார்கள். அப்படி செல்பவர்கள், அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதுபோல செல்லும்போது சில நாடுகளில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதலும் நடக்கிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் அயர்லாந்து நாட்டில் அரங்கேறியுள்ளது.

அயர்லாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வாட்டர்ஃபோர்டு நகரில் உள்ள தனது வீட்டின் வெளியே நியா நவீன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 12 முதல் 14 வயதான சிறுவர்கள் அந்த சிறுமியைத் தாக்கியுள்ளனர். மேலும், நியாவை அழுக்கானவள் என்றும் இந்தியாவுக்கே திரும்பிப் போ என்றும் சொல்லிச் சாடியுள்ளனர். தனது மகளை அந்த சிறார்கள் முகத்தில் குத்தியதாகவும் சைக்கிளால் அவளது அந்தரங்க உறுப்புகளில் தாக்கியதாகவும் சிறுமி நியா நவீனின் தாய் அனுப அச்சுதன் வேதனையுடன் கூறுகிறார். மேலும், தனது மகளின் கழுத்தில் குத்தி, முடியைப் பிடித்து இழுத்தாகவும் தாய் அனுப கூறுகிறார்.
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த செவிலியர் அனுப கடந்த எட்டு வருடங்களாக அயர்லாந்தில் கணவருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் அவருக்கு அயர்லாந்து குடியுரிமை கூட கிடைத்தது. இவர்களது குழந்தைகள் அயர்லாந்திலேயே பிறந்தவர்கள். ஜனவரியில் இந்த பகுதியில் புதிய வீட்டில் இவர்கள் குடியேறியுள்ளனர். அப்போது முதல் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமலேயே இருந்ததாம். இருப்பினும், திங்கள்கிழமை எல்லாமே மாறிவிட்டது. சம்பவம் நடந்த அன்று இரவு 7.30 மணியளவில் நியா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அனுப ஆச்சுதனுக்கு 10 மாத கைக்குழதந்யைும் இருக்கிறது. அந்த குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்ததால், நியாவை தனியாக விளையாட அனுப்பி இருக்கிறார். அதேநேரம் அவ்வப்போது வீட்டின் முன்புறம் வந்து கவனித்துள்ளார்.

உள்ளே திடீரென 10 மாத குழந்தை அழுததால் உணவளிக்க அனுப சில நிமிடங்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் அடுத்த நிமிடமே அவரது மகள் நியா முகம் முழுக்க பயத்துடன் வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். அயர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் மீதான இனவெறித் தாக்குதல் இது முதல் முறையல்ல. டப்ளினின் டாலக்ட் மற்றும் க்ளோண்டால்கின் பகுதிகளில் அண்மையில் இதுபோல பல இனவெறி தாக்குதல்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.