வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நியாய விலை பொருட்களை வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை வரும் 12 -ஆம் தேதி தொடங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைக்கிறார். தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் 2024 -ஆம் ஆண்டு “தாயுமானவர் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே ஏழை எளிய குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பது தான். கல்வி, மருத்துவம், தொழில் வாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் “தாயுமானவர் திட்டம்” உருவாக்கப்பட்டது.

இந்த . “தாயுமானவர் திட்டம்” மூலம் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நியாய விலை பொருட்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை வரும் 12 -ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்
மு.க. ஸ்டாலின் மாதம் தோறும் 2-வது சனி மற்றும் ஞாயிறு அன்று 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக நியாய விலை பொருட்கள் வழங்கப்படும். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்! ஆகஸ்ட் 12 தொடங்கி வைக்கிறேன்… 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று Door Delivery!” என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.