அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும், குழந்தைகள் நல மருத்துவ பிரிவு துறை தலைவர் எம் .கே. செந்தில்குமார் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இருக்கை மருத்துவ அலுவலர் க. கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அரியலூர் ரோட்டரி சங்க தலைவர் கருணாநிதி, சங்க செயலாளர் டி. பிரபுசங்கர், சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி எம் டி சுதாகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசவித்த தாய்மார்களிடம் குழந்தைகள் நல பிரிவு துறைத் தலைவர் எம்.கே. செந்தில்குமார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள், உலக தாய்ப் பால் வார விழா கொண்டாடுவதின் அவசியம் குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினர்.

தொடர்ந்து, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இருக்கை மருத்துவ அலுவலர் க. கொளஞ்சிநாதன் உலக தாய்ப்பால் வார செய்தி தொகுப்பு கையேடுகளை தாய்மார்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற தாய்மார்கள் அனைவருக்கும் அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மருத்துவமனையின் துணை இருக்கை மருத்துவ அலுவலர் அறிவுச்செல்வன், குழந்தைகள் நலபிரிவு மருத்துவர்கள் சிவக்குமார், மணிமாறன், ரவி, ராம்குமார், கௌதம், பாரதி, யாசின், சரவணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள், வெங்கடேசன், கொளஞ்சி, மகேந்திரன், கார்த்திகேயன், பாலமுருகன், எஸ் .ஆர். டிஜிட்டல் ராஜா, செவிலியர்கள் ஆனந்தி, கிருஷ்ண லீலா, அபிராமி, மஞ்சுளா, வனஜா மற்றும் தாய்மார்கள் பலர் பங்கேற்றனர் முடிவில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் ஆர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.