புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் ரஞ்சித் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பாத்தம்பட்டி என்னும் இடத்திலிருந்து ஆலங்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரை ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாளால் அவரை கொடூரமாக வெட்டி உள்ளது.அவர்களிடமிருந்து தப்பி ஓட ரஞ்சித் முயன்ற போது அவரை விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆலங்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பி ஓடிய அந்த கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பழங்குடி இளைஞர் ரஞ்சித் அவர்களை சமூக விரோதிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, உரிய நீதி கிடைக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வனவேங்கைகள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.