கொலை குற்றவாளி கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது காதலியுடன் உல்லாசமாக சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வேண்டும் என சொல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறை கைதி ஒருவர் (Prisoner Srikanth) தனது காதலியுடன் உல்லாசமாக சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் மதுக்கடை மேலாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2014 -ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி சிறையில் இருந்து ஸ்ரீகாந்த் தப்பிய நிலையில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனியையே ஸ்ரீகாந்த் அண்மையில் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது நெல்லூர், திருப்பதி மாவட்ட காவல்கண்கானிப்பாளர்களும் நெல்லூர் சிறை கண்காணிப்பாளரும், ஸ்ரீகாந்துக்கு பரோல் கொடுத்தால் அவர் வெளியே வந்து கடுமையான குற்றங்களைச் செய்யக் கூடும் என கூறி அவருக்கு பரோல் வழங்குவதை எதிர்த்தனர். நெல்லூர் மாவட்ட சிறை அதிகாரிகளால் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் வாகனத்தில் இருந்து இறங்கிய போது ஸ்ரீகாந்த் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் ஸ்ரீகாந்த்தை மீண்டும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விதிகளின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது யாரும் அவரை சந்திக்காமல் பார்த்துக் கொள்வது காவல்துறையினரின் கடமையாகும். ஆனால் ஸ்ரீகாந்த் சிறையில் இருப்பதால் அவரது கும்பலை அவரது காதலி அருணாதான் பார்த்துக் கொண்டு இருக்கிறாராம். இந்நிலையில் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அருணா, மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனது காதலனை கண்டதும் அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.