நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு பிரேமலதா விஜயகாந்த் வெற்றிபெற்றார். இந்நிலையில், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்க, மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதி அளித்தார்.