ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்த கொடூரன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய ரயில் ஏறி வந்து சிறுமியை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 4-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று சிறுமி, கெஞ்சிய போதும் அவர் விடவில்லை. கால்கள், முகங்களில் கொடூரமாகத் தாக்கி அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின் அந்த இளைஞர் செல்ஃபோனில் பேசிக் கொண்டு இருந்த போது, சிறுமி தப்பித்து முகங்களில் காயத்துடன் வீட்டிற்கு வந்த சிறுமியை பார்த்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதனிடையே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த சிசிடிவி காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே சிறுமியின் வாக்குமூலத்தில் அந்த இளைஞர் இந்தி பேசியதாகக் கூறி இருந்தார். இதன் மூலமாக வடமாநிலத்தவர் என்று தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குற்றவாளி குறித்த புகைப்படங்கள், புதிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் ஆகியவற்றை பதிவிட்டு தகவலை தெரிவிக்க குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மேலும், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்தும் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்படாததை கண்டித்து பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் பாமகவினர், புரட்சி பாரதம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இந்நிலையில் குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டதாகக் கூறி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உத்தரப்பிரதேசம் இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் உருவத்தைபோல் இருப்பதால் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 14 நாட்களுக்குப் பின் சிறுமியைப் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை கைது செய்துள்ளனர். அவரின் புகைப்படத்தையும் காட்டி சிறுமியிடம் உறுதி செய்து இருக்கின்றனர். இதற்கு முன்பாக 2 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டிய போது, இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது கைதான நபரின் புகைப்படத்தை காவல்துறை காட்டிய போது, அவர் கொடூரனை சரியாக அடையாளம் காட்டி இருக்கிறார். இவர் ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்ததாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய ரயில் மூலமாக அந்த இளைஞர் வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.