திருப்பூர் மாவட்டம், மூலனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கோவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது செய்த இன்று (12.11.2025) தேதி இருவரையும் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைக்கப்பட்ட உள்ளதாக மூலனூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் அவர்களின் உத்தரவின் பேரில் தாராபுரம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் மூலனூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன், ரமேஷ்குமார், கலைச்செல்வன், காளிராஜ் ஆகியோர் உள்ளடக்கி தனி படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி.வந்தனர். இந்த தேடல் பணியில் வெவ்வேறு இடங்களில் இருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகப்படும் TVS-50 ல் சென்ற இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த புது அழகாபுரியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவரையும் மூலனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த இருவரும் தேன் எடுப்பது போன்று கிராமங்களுக்கு சென்று கோயில்களை நோட்டமிட்டு வாரத்தின் வெள்ளிக்கிழமை தோறும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் கோயில்களிலும் அம்பளிகையில் உள்ள கோயில்களும் திருடியதே ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்நது இவர்கள் இருவர் மீது மூலனூர் காவல் நிலையத்தில் 320 /2025 u/s 331 (3) 305 BNS வழக்கு பதிவு செய்து திருட்டு வழக்கின் கண்டுபிடிக்கும் பொருட்டு இன்று (12.11.2025) தேதி மேற்படி இருவரையும் கைது செய்து களவு சொத்துக்களை மீட்டு களவுக்கு பயன்படுத்திய TVS-50 பறிமுதல் செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைக்கப்பட்ட உள்ளதாக மூலனூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது