கள்ளக்காதலுடன் சேர்ந்து தந்தையை கொன்று கல்லை கட்டி அணையில் வீசிய தாய் கள்ளக்காதலுடன் சிறைக்கு சென்ற நிலையில் 2 குழந்தைகள் தங்கள் பெற்றோரை காணாமல் கண்ணீர் சிந்தி வருகின்றன. இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது.
அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம், பத்னாபூர் தாலுகாவில் உள்ள சம்தானா கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவர் மனைவி மனிஷா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில, பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், பரமேஸ்வரை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்குமே பரமேஸ்வர் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்திற்கு ஓடிய மனிஷா, தன்னுடைய கணவரை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார். காவல்துறையினரும் இந்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மாயமான பரமேஸ்வரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள அணையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறை அந்த உடலை மீட்டு, இறந்தவர் யார் என்ற விசாரணயை மேற்கொண்டனர். அப்போதுதான் அது மாயமான பரமேஸ்வர் என்பது தெரியவந்தது. யாராவது பரமேஸ்வரை கொன்று, அதற்கு பிறகு அணையில் வீசி இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகித்தனர். எனவே, பரமேஸ்வரை கொன்றது யார்? என்று அடுத்த விசாரணையை விரிவுபடுத்தினார்கள்..
அந்தவகையில், கணவரை காணவில்லை என்று புகார் தந்த மனிஷாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் அதிகமானது. இத்தனை தொடர்ந்து மனிஷாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பரமேஸ்வரின் இளைய தம்பி தியானேஸ்வர். இவருக்கும் திருமணமாகிவிட்டது. பரமேஸ்வர் வசித்து வந்த அதே தெருவில்தான் இவரும் வசித்து வந்துள்ளார். அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதையும் வழக்கமாக வைத்திருந்தாராம்.

அப்போதுதான் அண்ணி மனிஷாவுடன் தியானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிலசமயம் அண்ணன் வீட்டில் இருந்தாலும்கூட, மனிஷாவுடன் தியானேஸ்வரிடம் போனில் பேசி வந்து மட்டுமின்றி தன்னுடைய கணவரிடமும் மனிஷா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் 2 குழந்தைகளையும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார். இதற்கு பிறகுதான் மனைவி மீது சந்தேகமடைந்த பரமேஸ்வர் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, மனிஷா – தியானேஸ்வர் இருவரின் மெசேஜ்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வர், தம்பியை கண்டித்து பிறகு மனைவிக்கும் அறிவுரை சொல்லியுள்ளார்.
இதனால் கடுப்பான கள்ளக்காதல் ஜோடி, உறவுக்கு தடையாக உள்ள பரமேஸ்வரை கொன்றுவிட முடிவு செய்தனர். இதற்காக கடந்த மாதம் 15-ந் தேதி இரவு தியானேஸ்வர், தன்னுடைய அண்ணனின் தலை மீது பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார். உடனே மனிஷா ஒரு துணியால், கணவரின் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார். இதில் பரமேஸ்வர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்துள்ளார். பிறகு கள்ளக்காதல் ஜோடி இருவரும், பரமேஸ்வரின் சடலத்தை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி, அதில் கல்லை கட்டி அணையில் வீசியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, காவல்துறையினர் மனிஷாவையும், தியானேஸ்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.