அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, 23 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனடியாக பொது மக்களின் மனுக்களின் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.