வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட மையம் சார்பில் 7 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி, பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறையினருக்கு சிறப்பு பணி பாதுகாப்பு இயற்றப்பட வேண்டும் , பணி பளு மற்றும் பணித்தன்மைக்குகேற்ப வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும், காலியாக உள்ள பணியிடத்தை உடனே நிரப்பிட வேண்டும், கருணை அடிப்படை வேலை வாய்ப்பு வழங்கிடும் உச்ச வரம்பை 5% மீண்டும் உயர்த்தி 25% ஆக வழங்க வேண்டும், தற்காலிக பணி, தொகுப்பூதிய பணி நியமனங் களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் கைவிட வேண்டும்.

மேலும், அனைத்தும் நிரந்தர பணியிடங்களாக நிரப்பிட வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 -ந் தேதியை வருவாய்த்துறை தினமாக அரசு அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு , அரியலூர் மாவட்ட மைய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர், அரியலூர் காமராஜர் திடலில் இருந்து பேரணியாக கிளம்பினர். இந்த பேரணி கடைவீதிகள் வழியே சென்று, இறுதியில் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.