பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே. சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பதிலளித்தனர்.

இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே. சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார்.