பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் வீட்டில் இருந்தபடியே அவர் மரியாதை செய்தார்.
இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செய்தார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர். புஸ்ஸி ஆனந்த் தேவர் சிலைக்கு மரியாதை செய்த போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி புஸ்ஸி ஆனந்த் தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு.. தவெக வாழ்க.. தவெக வாழ்க.. என்று கோஷமிட்டனர். புஸ்ஸி ஆனந்த் தவெக வாழ்க.. என்று சொன்னவுடன் கட்சி நிர்வாகிகளும் தவெக வாழ்க.. என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து கோபம் அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. கீழ இறங்கி வாங்க என்று கடுப்பாகி அழைத்தனர். தேவருக்கு மரியாதையை செய்துவிட்டு தேவரை வாழ்த்தாமல் அங்கேயும் போய் தவெகவை வாழ்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.