இந்தியாவிற்கு 16 -ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரி ‘பிரான்சிஸ் சேவியர்’ அவர்கள் அன்பு, பிறருக்கு உதவுவது, பிறர் படும் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து கொள்வது, உணவு இல்லாதோருக்கு உணவு அளிப்பது, அன்பை பகிர்ந்து கொள்வது போன்ற அனேக விஷயங்களை உள்ளடக்கி தன் ஊழியத்தை இந்தியாவில் ஆரம்பித்தார்.
உண்மையும், உத்தமமாய் ஊழியம் செய்பவனுக்கு கர்த்தர் மென்மேலான ஆசீர்வாதங்களை தருவார் என்று தான் வேதாகமம் சொல்கிறது.ஆனால், இன்று தங்கள் சுயலாபத்திற்காக ஒரு மதத்தின் பெயரை பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் ஒரு சில போலி போதகர்கள். மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சம்பாத்தியத்திற்காகவும் கிறிஸ்துவத்தின் பெயரை சீரழிக்கிறார்கள்.
அதேபோல ஆண்டவருக்காக உண்மையாக ஊழியம் செய்யும்போது அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அவர் ஒருபோதும் ஊழியக்காரர்களை வியாபாரம் செய்ய கூறவில்லை. ஆனால் இந்திய திருநாட்டில் கிறிஸ்துவ பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சில ஊழியர்கள் ஊழியத்தை SIDE BUSINESS-ஆக செய்து கொண்டு, அவர்களின் நம்பி ஜெபிக்க வரும் மக்களை பயன்படுத்தி அவர்களுடைய வியாபாரங்களை அவர்களிடம் திணிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஆண்டவர் பரிசுத்த வேதாகமத்தில் எங்கேயாவது ஊழியர்களே நீங்கள் கமிஷனுக்காக ஊழியம் செய்யுங்கள். நீங்கள் ஊழியத்தை ஒரு பொழுதுபோக்காக செய்யுங்கள் என்று கூறவே இல்லை. ஆனால் இப்பொழுது உள்ள ஊழியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிக்கட்டிப் பறக்கிறார்கள்.
மேலும், கிறிஸ்துவத்தின் பெயரை பயன்படுத்தி வரிவிலக்கு பெற்றுக் கொண்டு ட்ரஸ்ட்டை நடத்தும் சிலர் அவர்களை நம்பி வரும் மக்களிடம் அவர்களுடைய சூழ்நிலை பயன்படுத்திக் கொண்டு பணம் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். அதாவது, ஜெபிக்கும் பொழுது உங்களுக்காக ஆண்டவர் ஒரு நிலத்தை காட்டி இருக்கிறார் அந்த நிலத்தை வாங்குங்கள் என்றெல்லாம் கூறி கீழ்த்தரமான பொழப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால், உங்களிடத்திலுள்ள மூப்பர்களை, சக மூப்பராகவும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியாகவும், இனி வெளிப்படப்போகிற மகிமைக்குப் பங்காளியாகவும், நான் புத்திசொல்லுகிறேன்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய், தேவன் உங்களை விரும்புகிறபடி மேற்பார்வை செய்யுங்கள். வெட்கக்கேடான ஆதாயத்திற்காக அல்ல, மனப்பூர்வமாய்; உங்கள் பொறுப்பில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு மாதிரிகளாக இருங்கள். பிரதான மேய்ப்பர் தோன்றும்போது, மகிமையின் வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
அதேபோல், இளையவர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் “தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்.” எனவே, ஊழியக்காரர்களே, உங்களை நம்பி வரும் சபை விசுவாசிகளை ஏமாற்றாதீர்கள், முட்டாளாக்காதீர்கள். ஆண்டவர் பேரை சொல்லிக் கொண்டு உங்களுடைய வியாபாரத்தை அவர்களிடம் திணிக்காதீர்கள். உண்மையும் உத்தமமாக ஊழியம் செய்யுங்கள் கர்த்தர் உங்களை போசிப்பார். கிறிஸ்துவ மக்களே போலி ஊழியர்களிடம் ஏமாறாதீர்கள்.