புதிதாக அறிமுகமாகும் “சியாரா” ரக கார்கள் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு, ICC-ன் சுமார் 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை, BCCI சார்பிலும் 51 கோடி ரூபாய் என 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி பண மழை பொழிந்து வருகின்றனர். மராட்டியத்தை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் ஆகிய 3 பேருக்கும் மராட்டிய அரசு தலா ரூ 2.25 கோடி ரொக்கப்பரிசு வழங்கியுள்ளது.
அதோபோல ஸ்ரீசரணிக்கு 2.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு, கடப்பாவில் 1,000 சதுர அடி வீட்டுமனை மற்றும் குரூப் – 1 அளவிலான அரசுப்பணி வழங்கி சந்திரபாபு நாயுடு கவுரவித்துள்ளார். 47 ஆண்டுகளாக காயங்களும் கண்ணீரும் நிறைந்த போராட்டத்தை கடந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. பல தோல்விகளையும் அவமானங்களையும் தாண்டி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
காயத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட கதை இது.. 47 வருடங்களாக திறமைக்கான அங்கீகாரத்திற்காக நடத்தப்பட்ட போராட்ட களம் இது.. எத்தனை அவமானங்கள், எத்தனை ஏளனங்கள், எத்தனை எத்தனை தோல்விகள், அனைத்தையும் கடந்துவந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒருவழியாக 2025 உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் கிரீடத்தை சுமந்துள்ளது. மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 1973- ஆம் ஆண்டு அதாவது உலகக்கோப்பை ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டிகளுக்கு இரண்டாண்டுகள் முன்னரே இந்திய மகளிருக்கு அணி இல்லாதபோது… இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து முதல் கோப்பையை வென்றது.
உடனே பிரதமர் இந்திரா காந்தி அதே ஆண்டு விளையாட்டுகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி Women’s Cricket Association of India என்கிற இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் நிறுவி அடுத்த மகளிர் உலகக் கோப்பையில் போட்டியிட தயார் படுத்தினர். இதன் விளைவாக 1978- ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா என மொத்தமே 4 அணிகள் கலந்துகொள்ள டயானா எடுல்ஜி தலைமையிலான இந்திய மகளிர் அணியில் சாந்தா ரங்கசாமி தலைமையிலான இந்திய மகளிர் அணியில், கார்கி பானர்ஜி மற்றும் சந்தியா அகர்வால் போன்ற வீராங்கனைகள் விளையாட அனுப்பவும், செலவிடவும் பணமில்லை என விளையாட அனுப்பாமல் பின்வாங்கிய நிலையில்… இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா முதல் கோப்பையை வென்றது.

அடுத்த 1982- ஆம் ஆண்டு நியூசிலாந்த்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச XI என மொத்தமே 5 அணிகள் கலந்துகொள்ள சாந்தா ரங்கசாமி தலைமையிலான இந்திய மகளிர் அணியில், டயானா எடுல்ஜி, கார்கி பானர்ஜி மற்றும் சந்தியா அகர்வால் போன்ற வீராங்கனைகள் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக கோப்பையை தக்கவைத்து கொண்டது. அடுத்த 1988- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என மொத்தமே 5 அணிகள் கலந்துகொண்டு ஆஸ்திரேலியா மூன்றாவது முறையாக கோப்பையை தக்கவைத்து கொண்டது.
அதையடுத்த 1993- ஆம் ஆண்டு இங்கிலாந்து நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, டென்மார்க் , மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு டென்மார்க் 9 விக்கெட் வித்தியாசத்தில், மேற்கிந்தியத்தீவுகள் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மற்றும் நெதர்லாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வீழ்த்தி 4 இடம் பிடிக்க இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் இருந்து கோப்பையை பறிக்க நியூசிலாந்திடம் பலப்பரிசை நடத்தி இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அடுத்த 1997- ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆறாவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் A பிரிவு, நியூசிலாந்து, இந்தியா,மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 5 அணிகள் B பிரிவு என மொத்தமே 11 அணிகள் கலந்துகொண்டு பிரமிளா எஸ். பட் தலைமையிலான இந்திய மகளிர் அணியில், அஞ்சு ஜெயின், பூர்ணிமா சவுத்ரி மற்றும் ரேணுகா மார்கிரேட் நியூசிலாந்து இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டிக்காக 80,000 பேர் கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் குவிந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியிடம் நியூசிலாந்து கோப்பையை பறிகொடுக்க ஆஸ்திரேலியா நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இது BCCI பார்வை மகளிர் கிரிக்கெட் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
அடுத்த 2000- ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஏழாவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா,மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, அயர்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து என மொத்தமே 10 அணிகள் கலந்துகொண்டு அஞ்சு ஜெயின் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜ், அஞ்சூம் சோப்ரா, நீது டேவிட், மற்றும் தீபா மராத்தே போன்ற வீராங்கனைகள் விளையாடிய நிலையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி மற்றும் மூன்றாவது இடம் பிடித்த இந்தியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

மேலும் பல வருட கடின உழைப்பு சாந்தா ரங்கசாமி, டயானா எடுல்ஜி, அஞ்சும் சோப்ரா மற்றும் மிதாலி ராஜ் போன்ற வீராங்கனைகள் மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களாக உருவெடுக்க 2005- ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா,மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் ஜுலன் கோஸ்வாமி, ஹேம்லதா கலா மற்றும் அஞ்சு ஜெயின் போன்ற வீராங்கனைகள் விளையாடிய நிலையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த இந்தியா அணி மற்றும் மூன்றாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 40 ரன்கள் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியது.
இந்தியா முதல் முறையாக கைப்பற்றும் நோக்கில் பலப்பரிசையில் ஆஸ்திரேலியா 98 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும், இந்த நிகழ்வு இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் முக்கியமாக பணக்கார BCCI நிறுவனத்தை மகளிர் கிரிக்கெட் நோக்கி ஈர்த்தது. 2006 -ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தை BCCI உடன் ஒருங்கிணைத்தது. இது பெண்கள் விளையாட்டுக்கு மேம்பட்ட வசதிகள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் தொழில்முறை ஆதரவைக் கொண்டு வந்தது. பிசிசிஐ WCAI உடன் இணைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் விளையாட்டு குறிப்பிடத்தக்க அளவில் இந்தியாவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த அணி பல உலகக் கோப்பைகளில் பங்கேற்று புதிய உச்சங்களை தொட்டது. மேலும் சர்வதேச T-20 போட்டிகளின் வருகையாலும், மகளிர் T-20 சேலஞ்ச் போன்ற உள்நாட்டு T-20 லீக்குகளின் பிரபலத்தாலும், இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
அடுத்த 2009- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் A பிரிவு, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் B பிரிவு என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடி புள்ளி பட்டியலில் A மற்றும் B பிரிவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மொத்தம் 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற சூப்பர் 6 சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அணிகள் இறுதி போட்டியில் விளையாடும் அந்த வகையில் ஜுலன் கோஸ்வாமி தலைமையிலான இந்திய மகளிர் அணியில் தலைமையிலான இந்திய மகளிர் அணியில், திருஸ் காமினி, மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடினர். சூப்பர் 6 சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி இங்கிலாந்து மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அடுத்த 2013- ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பத்தாவது போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 4 அணிகள் A பிரிவு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் B பிரிவு என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடும் அந்த வகையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் தலைமையிலான இந்திய மகளிர் அணியில், ஜுலன் கோஸ்வாமி, திருஸ் காமினி மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடினர். சூப்பர் 6 சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி மேற்கு இந்திய தீவுகள் அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
மீண்டும் சூப்பர் 6 சுற்று நீக்கப்பட்டு 2017- ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 11-வது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா,மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் சுமிருதி மந்தனா, ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சா்மா போன்ற வீராங்கனைகள் விளையாடிய நிலையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணி மற்றும் மூன்றாவது இடம் பிடித்த இந்தியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறி இறுதி போட்டியில் அடுத்த இந்தியா முதல் முறையாக கைப்பற்றும் நோக்கில் பலப்பரிசையில் இங்கிலாந்து அணியிடன் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ இங்கிலாந்து நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அடுத்த 2022- ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 12-வது போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா,மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் என மொத்தமே 8 அணிகள் கலந்துகொண்டு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் சுமிருதி மந்தனா, ரேணுகா சிங், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சா்மா போன்ற வீராங்கனைகள் விளையாடிய நிலையில் இந்திய அணி புள்ளிபட்டியலில் 5-ஆம் இடம் பிடிக்க ஆஸ்திரேலியா அணியிடம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை தழுவ ஆஸ்திரேலியா 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
மேலும் எத்தனையோ சவால்களை கடந்துவந்து அஞ்சும் சோப்ரா, நீது டேவிட், மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா போன்ற பல தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கண்டது. ஆனால் தனிப்பட்ட சாதனைகளால் சிகரம் தொட்ட இந்திய வீராங்கனைகளால் ஒருமுறை கூட உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏமாற்றமும், ஆராத காயமும் மட்டுமே மிஞ்சியது.
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த ஏமாற்றம், ஆராத காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் சுமிருதி மந்தனா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா, தீப்தி சா்மா மற்றும் ரிச்சா கோஷ் போன்ற வீராங்கனைகள் துணையுடன் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் மைதானத்தில் 7 முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி, 4 முறை உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணி, 1 முறை உலகக்கோப்பை வென்ற நியூசிலாந்து அணி இல்லாமல் இறுதி போட்டியில் இரண்டாவது முறையாக தென் ஆப்பிரிக்கா அணியும் மற்றும் மூன்றாவது முறையாக இந்தியா அணியும் முதல் முறை கோப்பையை கைப்பற்றும் பலப்பரிசையில் 47 ஆண்டுகளாக காயங்களும் கண்ணீரும் நிறைந்த போராட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
குறிப்பாக 4 முறை உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணிக்கும், 7 முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அணிக்கும் வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியன் போட்டியில் குறிப்பாக 4 முறை உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. ஆட்சிகள் மாறலாம்..!! காட்சிகள் மாறலாம்…!! ஆனால் 52 ஆண்டுகளுக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி விதைத்த விதை இன்று வளர்ந்து உலகக்கோப்பையை கைப்பற்றி மகுடம் சூடியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.