அரியலூர் மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பாக ஜெனிவா ஒப்பந்த தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைப்பிடிப்பதை முன்னிட்டு மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் அரியலூர் மாவட்ட அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் விதமாக 2025-26 ஆம் ஆண்டுக்கான 76-வது ஜெனீவா தின கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஸ்டீபன் அவர்கள் யூத் ரெட் கிராஸ் (YRC) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்கள்.கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

அரியலூர் மாவட்ட கிளையின் தலைவர் ஜெயராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவர் திரு.சந்திரசேகர் அவர்கள், மாவட்டச்செயலாளர் திரு.சண்முகம் அவர்கள், மாவட்ட பொருளாளர் எழில் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்தும் இருபால் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜெனிவா ஒப்பந்த தின பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.நிறைவாக அக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா அவர்கள் நன்றி கூறினார்கள்.