11-ஆம் வகுப்பு படிக்கும் தன் சகோதரியுடன் பேசியதற்காக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவரை 10-ஆம் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சென்னையில் சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித்திற்கு தெரிய வந்துள்ளது.

இதன்பின் சுர்ஜித், கவின் செல்வகணேஷினிடம் பேசுவதற்காக அழைத்து இதனை நம்பி கவின் செல்வகணேஷ் சென்ற நிலையில், சுர்ஜித் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் திருநெல்வேலியில் மீண்டும் ஆணவக் கொலை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் 10-ஆம் வகுப்பு படிக்கும் சகோதருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் சகோதரர் தனது நண்பர்களை கூட்டிச் சென்று, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட 5 சிறார்களை காவல்துறை பிடித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.