கோயம்புத்தூர் மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய கோயம்புத்தூர் மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி வி.என்.ஆர். நகரில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம் செயல்படுகிறது. இங்கு கனிதா என்பவர் செவிலியராக வேலை செய்து வந்தார். கனிதா சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நகர்ப்புற சுகாதார நிலையத்தை திமுக பிரமுகர் ஒருவர் வீடாக மாற்றி பயன்படுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக ‘ஐ.டி. விங்’ சேர்ந்த ஹரிபாபு என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பாலுசாமி தலைமையிலான அதிகாரிகள் வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு செவிலியர் கனிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் பாலுசாமி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர் கனிதா, கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசு அனுமதியோடு தங்கி இருந்த செவிலியரின் வீட்டுக்குள் தன்னை சமூக ஆர்வலர்கள் என கூறிக்கொண்டவர்கள் ( அதிமுக ‘ஐ.டி. விங்’ சேர்ந்த ஹரிபாபு என்பவர்) அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பல்வேறு எண்களில் செல்போன் மூலம் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெகன் குமார் காலத்தில் கட்டப்பட கட்டிடத்தில் எதற்காக தங்கிருக்கிறார் தன்னிடம் விசாரிக்காமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.