துபாயில் தங்குமிட பொறுப்பாளராகப் பணிபுரியும் வரும் சென்னையை சேர்ந்த நபருக்கு யுஏஇ லாட்டரியான பிக் டிக்கெட் வாங்கியதில் 2.45 கோடிக்கு மேலாக பரிசாக அடித்துள்ளது. கட்டிட வேலைகள், ஓட்டுனர்கள் என பல்வேறு வேலைகளுக்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் லாட்டரிஅனுமதி இல்லாத நிலையில் இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது.
இதேபோல ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் லாட்டரிகளுக்கு அனுமதி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் சிலருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருக்கிறது. வேலைக்கு போன இடமாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனாலும் ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டக் காற்றும் வீசி விடுகிறது.
அந்த வகையில்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த துபாயில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்தவரான பஷீர் கைபுரத் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக லாட்டரி வாங்கி வருகிறார். பஷீர் கைபுரதிற்க்கு இதுவரை பரிசு அடித்தது இல்லை, ஆனாலும் எப்படியாவது ஒருநாள் நமக்கான அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற ஆசையில் டிக்கெட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில்,பஷீர் கைபுரத் பிக் டிக்கெட் குலுக்கலில் பங்கேற்றார். அவர் வாங்கிய 276640 என்ற டிக்கெட் எண்ணுக்கு 1 லட்சம் திர்ஹாம் ( இந்திய மதிப்பில் தோராயமாக இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ) லாட்டரியில் பரிசாக அடித்துள்ளது.
இதேபோன்று சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் என்பவர் துபாயில் 20 ஆண்டுகளாகத் தங்குமிட பொறுப்பாளராகப் பணிபுரியும் வருகிறார். சக்தி விநாயகன் கடந்த 5 ஆண்டுகளால ஆண்டுகளாக பிக் டிக்கெட் சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் சக்தி விநாயகன் யுஏஇ பிக் லாட்டரி வாங்கியுள்ளார். அதில் சக்தி விநாயகனுக்கு ஒரு மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் தோராயமாக இதன் மதிப்பு ரூ.2,45,75,850) லாட்டரியில் பரிசு அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.