19-வது ஐபிஎல் (IPL) கிரிக்கெட் திருவிழாவின் மாபெரும் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் வழக்கம் போல் அதிரடி காட்டிய போது 2.2 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் சுப்மன் கில் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து மற்றும் சாய் சுதர்சனுடன் இணைய 3.4 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்து நிலையில் புவனேசுவர் குமார் பந்து வீச்சில் சாய் சுதர்சன் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் நிஷாந்த் சிந்துடன் இணைய 8.0 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் நிஷாந்த் சிந்து 18 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் ஜோஸ் பட்லருடன் இணைய 12.1 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்து நிலையில் குருணால் பாண்டியா பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அர்சத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 14.1 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் அர்சத் கான் 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ராகுல் தெவாட்டியா மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 16.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 7 ன்களுக்கு ஆட்டமிக்க 115 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டுள்ள நிலையில் ஜேசன் ஹோல்டர் வாசிங்டன் சுந்தருடன் இணைய 18.3 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து நிலையில் புவனேசுவர் குமார் வீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 7 ன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரஷீத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 19.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து நிலையில் ரஷீத் கான் 3 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஷீத் கான் மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய 19.2 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து நிலையில் ரசிக் சலாம் தார் பந்து வீச்சில் ரஷீத் கான் 3 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய காகிசோ ரபாடா மற்றும் வாசிங்டன் சுந்தருடன் இணைய வாசிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களும், காகிசோ ரபாடா 35 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தரப்பில் ரசிக் சலாம் தார் 2 விக்கெட்டும், புவனேசுவர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது.