விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், ‘புஷ்பா’ பட ஸ்டைல் போலவும், அதே சமயம் குட்டையாக இருக்கும் டெம்பா பவுமா நடப்பதை கிண்டல் செய்வது போலவும் விராட் கோலியின் இந்தச் செய்கையைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறியது அடுத்ததாக, போட்டியின் கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் அபாயகரமான வீரரான கார்பின் போஷ் விக்கெட்டை ‘காட் அண்ட் போல்ட்’ முறையில் தானே கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.
விக்கெட் விழுந்த அடுத்த நொடியே ஓடி வந்த விராட் கோலி, குல்தீப் யாதவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, ஒரு ரொமான்டிக் பாடலுக்கு ஆடுவது போல “ஜோடி டான்ஸ்” ஆடினார். குல்தீப்பும் கோலியுடன் இணைந்து அந்த ஸ்டெப்பை போட, மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்தது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த மிகப்பெரிய உலக சாதனையை, விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ‘தொடர் நாயகன்’ விருது வென்ற வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்தத் தொடரில் விராட் கோலி ஆடிய விதம் அனைவரையும் மிரள வைத்தது. அவர் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் குவித்தார். 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அவரது சராசரி 151 என்பதாக உள்ளது. ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் சதம் அடித்த அவர், விசாகப்பட்டினத்தில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். விருது பெற்ற பிறகு பேசிய விராட் கோலி, “உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தொடரில் நான் ஆடிய விதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. கடந்த 2-3 ஆண்டுகளாக நான் இந்த அளவுக்குச் சிறப்பாக ஆடவில்லை என்று நினைக்கிறேன். இப்போது மனதளவில் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். ஆட்டம் எனக்குச் சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி” என்றார்.
எது சிறந்த இன்னிங்ஸ் என்று கேட்டதற்கு, “ராஞ்சி இன்னிங்ஸ் தான் எனக்கு ஸ்பெஷல். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆடினேன். அந்தப் போட்டியில் நான் ஆடிய விதம், எனக்குள் இருந்த பழைய நெருப்பை மீண்டும் பற்ற வைத்தது” என்று குறிப்பிட்டார். அடுத்ததாக விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலி அறிமுகமாகி 2009-ல் இலங்கைக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 53, டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 84 சதங்களை விராட் கோலி பதிவு செய்துள்ளார்.
ரன் மெஷின் என அறியப்படும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இளம் வயது முதலே பலரும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசுவதும் உண்டு. அந்த வகையில் கிரிக்கெட் உலகில் நூறு சதங்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தை அவர் பதிவு செய்ய எடுத்துக் கொண்ட காலம் சற்று நீளமானது. 2019 நவம்பரில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 70-வது சர்வதேச சதத்தை விராட் கோலி பதிவு செய்தார்.
அதன் பின்னர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் சர்வதேச அளவில் சதம் பதிவிட விராட் கோலி எடுத்துக்கொண்ட காலம் 1020 நாட்கள். இந்த இடைவெளி நூறு சதங்களை அவர் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பை மழுங்க செய்தது. கடந்த 2022-ல் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனது 71-வது சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். கடைசியாக ராய்ப்பூரில் கடந்த 3-ந் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 84-வது சதமாக அமைந்தது.
2024-ம் ஆண்டு டி20 மற்றும் நடப்பு ஆண்டில் கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். அதோடு தனது 37-வது பிறந்தநாளை கடந்த நவம்பர் மாதம் கொண்டாடினார். ஒரு பக்கம் விராட் கோலி விளையாடும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைகிறது, மறுபக்கம் வயது கூடுகிறது. 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா? என்பதும் பேசுபொருளாகி உள்ளது. இந்த சூழலில்தான் நூறாவது சதத்தை விராட் கோலி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த மிகப்பெரிய உலக சாதனையை, விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ‘தொடர் நாயகன்’ விருது வென்ற வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தி உள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய விராட் கோலிக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து) அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் (19 முறை) வைத்திருந்தார். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி தனது 20-வது தொடர் நாயகன் விருதை வென்று, சச்சினின் நீண்ட கால சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 20 முறை இந்த விருதை வென்ற உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
மேலும் எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடர் வரையில் இந்திய அணி விளையாட உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 45. இதில் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர், ஆசிய கோப்பை மற்றும் 2027 உலகக் கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 11 போட்டிகளில் இந்தியா விளையாட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த 45 போட்டிகளில் 16 சதங்களை கோலி பதிவு செய்ய வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சராசரியாக 5 போட்டிகளுக்கு ஒரு சதம் என விராட் கோலி பதிவு செய்துள்ளார்.
இன்னும் எத்தனை காலம் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பதும் யாரும் அறியாத ஒன்று. இப்போது அவர் சிறந்த உடல் திறனோடு, அபார ஃபார்மில் உள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விராட் கோலி ஓய்வு அறிவிக்கலாம். இந்த சூழலில் காலமும் நேரமும் அவருக்கு கைகூடினால் நிச்சயம் நூறு சதங்களை விராட் கோலி பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ‘கிரிக்கெட் அரசன்’ என போற்றப்படும் விராட் கோலி, ஒற்றை பார்மெட்டில் ஆடி இந்த சாதனையை படைப்பது மிகவும் சவாலானது. அதே நேரத்தில் விளையாட்டில் அனைத்தும் சாத்தியம் என்பதால் விராட் கோலியின் நூறாவது சத மைல்கல் சாதனையை நேர்மறையாக பார்ப்போம்.