ஒரு காலத்தில் அண்ணாதுரையைப் பச்சையப்பன் கல்லூரிக்கு அழைத்துப் பேச வைத்து, பாரதிதாசனை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துப் பேச வைத்து இப்படி வலம்புரி ஜான் தொடங்கி சுகிசிவம் வரை தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர். இதற்கு அடுத்த தலைமுறை தன்னம்பிக்கை பேச்சாளர் எம்.எஸ் உதயமூர்த்தி அழைத்து மேடையை அழகுபடுத்தியது. ஆனால், இன்று தரக்குறைவாகப் பேசுவோரை, தரக்குறைவாக வீடியோ வெளியிடுபவர்கள் எல்லாம் அரசியல் அறிவு விருது பரிமாறப்பட்ட அவையில் இன்று ஆபாசம் பரிமாறப்படுகிறது. இன்ஸ்டா பிரபலம் என்று எந்த அறிவு முதிர்ச்சியும் இல்லாதவர்களை அழைத்து அழகு பார்க்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு செய்தி நிறுவனமே 1 மில்லியன் Followers ரீச் செய்வதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. அதே நல்ல மனசுடன் நாட்டுக்கு நல்ல செய்திகளை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் தரமான சானல்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் எல்லா 5 ஆயிரத்தை எட்டியிருந்தால் அது மாபெரும் சாதனை. ஆனால், வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கடலை போடும் ஒரு நபரைக் கல்லூரிக்கு அழைப்பதுடன் கிட்டத்தட்ட 3 மில்லியன் நபர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்பது வேதனையா சாதனையா?
சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைத்து வருபவர்களைத்தான் ஒரு காலத்தில் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக அழைப்பார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. யூடியூப்பில் 1000 பேர் Followers வைத்தால் அவர் செலிபிரிட்டி. அவருக்கு வேட்டு போட்டு அழைத்துப் போய் டான்ஸ் ஆட வைக்கிறார்கள் என்பதே காலக்கொடுமை.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், மேடைப் பேச்சுகள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் என தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த தேர்தல்களில் டிவி விளம்பரங்களுக்கும், பேஸ்புக் போஸ்ட்களுக்கும் அரசியல் கட்சிகள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், இந்த முறை ‘மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்களை’ அரசியல் கட்சி தலைவர்களின் பார்வை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் யூடியூபர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பிரபலமான உணவக விமர்சகர், நகைச்சுவை வீடியோ செய்பவர் அல்லது அந்த ஊர் செய்திகளை உடனுக்குடன் பகிரும் யூடியூப் சேனல் எனப் பலரும் அரசியல் கட்சி தலைவர்களின் விருப்ப பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் செய்தித்தாள்களை விடவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும், யூடியூப் சார்ட்ஸ்களையும் தான் அதிகம் பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த ஒரு நபர் சொல்லும் கருத்து எளிதில் சென்றடைந்து விடுகிறது. பொதுவாக நேரடியாக ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லாமல், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ செய்த பணிகளைப் புகழ்வது போலவும், அரசுத் திட்டங்களால் பயன் அடைந்தது போலவும் “கேஷுவலாக” வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
அரசியல்வாதி பேசுவதை விட, தினமும் நாம் பார்க்கும் ஒரு சமூக வலைதளப் பிரபலம் பேசும்போது அது ஒரு ‘நண்பரின் பரிந்துரை’ போல தெரிவது தான் இன்ஸ்டா இன்புளுயன்சர்களுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்ஸ்டா இன்புளுயனர்சகள், ட்விட்டர் இன்புளுயன்சர்களை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது, அவர்களை திட்டுவது, வார் ரூமுடன் சண்டை போடுவது போன்ற பணிகளையும் செய்கிறார்கள் என்பது தான் குறிக்கோள். இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் கொண்டு பிக் பாஸ் தமிழ் 9-சீசன் ஒளிபரப்பப்பட்டு கடைசியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தது போல இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் தேர்தலில் எந்த ஒரு தகத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை .