சர்வதேச T- 20 போட்டிகளில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 3 ஒரு நாள் , 5 T- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21-ந் தேதி இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலம் குவாஹாட்டியின் பர்சபரா மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டெவோன் கான்வே (1), ரச்சின் ரவீந்திரா (4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகளாக டெவோன் கான்வே, டிம் சீஃபர்ட் களமிறங்கினர். ஆனால் ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் ஏற்கனவே 4 முறை ஆட்டமிழந்து இருந்த டெவோன் கான்வே முதல் ஓவரில் 3 பந்தில் 1 ரன் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா இடதுபுறம் பாய்ந்து அற்புதமான கேட்ச் பிடிக்க 5-வது முறையாக ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் டேவோன் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சீஃபர்ட்வுடன் இணைய 1.4 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்து நிலையில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ரச்சின் ரவீந்திரா 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தபோது ரவி பிஷ்னோய் பாய்ந்து அற்புதமான கேட்ச் பிடிக்க ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் மற்றும் டிம் சீஃபர்ட்வுடன் இணைய 5.1 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் டிம் சீஃபர்ட் 11 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் மற்றும் கிளென் பிலிப்ஸூடன் இணைந்த சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த கூட்டணி 86 ரன்கள் எடுத்து நிலையில் 11.6 ஓவர்களில் ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் மார்க் சாப்மேன் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸூடன் இணைந்த சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த கூட்டணி 112 ரன்கள் எடுத்து நிலையில் 14.4 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் டேரில் மிட்செல் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என உட்பட 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸூடன் இணைய அதே 112 ரன்களில் 15.1 ஓவர்களில் ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என உட்பட 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பந்து வீச்சு தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டு கைப்பற்றினர். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆனால் தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சன் மாத்தியூ ஹென்றி பந்து வீச்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இந்திய அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய இசான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் இணைய மாத்தியூ ஹென்றியின் முதல் ஓவரின் 3 -வது மற்றும் 4 -வது பந்தில் இசான் கிஷன் சிக்ஸர் அடிக்க 5 -வது பந்தில் பவுண்டரி அடித்து நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதற அடித்தார். இதன் விளைவு இந்திய அணி 3.1 ஓவர்களில் 53 ரன்களை கடந்த அடுத்த பந்திலேயே 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதற அடித்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அதிரடியாக குவித்தது. மேலும் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதத்தை கடந்து சாதனை படைத்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தனர்.
மேலும் சூர்யகுமார் யாதவ் 9.5 ஓவர்களில் அரைசதத்தை கடக்க அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களும், சூரிய குமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக 154 ரன்கள் என்று இலக்கை வெறும் 10 ஓவரிலேயே இந்திய அணி எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. மேலும் சர்வதேச T- 20 போட்டி வரலாற்றில் 25 பந்துகளுக்கு கீழ் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை சூரியகுமார் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் பெற்றனர்.

நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை எந்த ஒரு அணியும் 10 ஓவர்களுக்குள் எட்டிப்பிடித்ததில்லை. அந்த வகையில் நியூசிலாந்திற்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த அணி என்ற பெருமை இந்தியா பெற்றது. மேலும் சர்வதேச T- 20 போட்டிகளில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 37 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
இதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி T- 20 தொடர்களில் தொடர்ச்சியாக 11 தொடர்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 2016-18 காலகட்டத்தில் பாகிஸ்தான் படைத்த 11 தொடர் வெற்றிகள் என்ற சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற T- 20 தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாகப் பெறும் 10-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியா (8 தொடர்கள்) மற்றும் பாகிஸ்தான் (5 தொடர்கள்) ஆகிய அணிகளின் சாதனைகளை இந்தியா முறியடித்து இந்திய அணி பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது