அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், 1962-ல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொள்ள நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணிக்கும் இடையே கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி வெறும் இரண்டு கோல்களை மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது அபாரமான தடுப்பாட்ட வலிமையை நிரூபித்துள்ளது. அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார். நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.
அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பரான எமிலியானோ மார்டினெஸ், இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகளைப் பலமுறை சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரம் வரை ஸ்பெயின் அணியை கோல் எதுவும் வாங்காமல் வைத்திருந்ததில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. இந்த இறுதிப்போட்டியின் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. ஆட்டத்தின் 90+3-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நடுகள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் அர்ஜெண்டினா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்த ஃபெரான் டோரஸ் பந்தை அர்ஜெண்டினாவின் வலைக்குள் செலுத்தி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். அந்த ஒரு கோலே ஸ்பெயினின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

1962-ல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற கடுமையாகப் போராட ஆட்டத்தின் இறுதி நொடிகளில் லியோனல் மெஸ்சி தனது அசாத்திய திறமையால் மார்கோஸ் செனேசிக்கு ஒரு அருமையான பாஸ் கொடுத்தார். ஆனால், ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்து நிறுத்த, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பைக் கனவு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
ஆனால், கடந்த 2010-ஆம் ஆண்டில் தங்களது முதல் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் அணி, சரியாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை தன்வசமாக்கி கொள்ள அர்ஜென்டினாவின் கனவு தகர்ந்தது. ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை பயணம் சோகத்துடன் நிறைவடைந்தது. இதன் மூலம், யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின், தற்போது உலகக் கோப்பையையும் கைப்பற்றி சர்வதேச கால்பந்து உலகின் அசைக்க முடியாத அணியாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.