ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்று இருக்கிறது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2025 போட்டிகள் பீகாரில் உள்ள ராஜ்கிரில் மைதானத்தில் ஆகஸ்ட் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 7, 2025 வரை நடைபெறும். பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இந்தியாவில் நடைபெற்றுவதால் போட்டியில் இருந்து வெளியேற இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான், மலேசியா, தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் சீன தைபே ஆகிய எட்டு முன்னணி அணிகள் பட்டத்திற்காக விளையத்தியது.
இதில் A குழுவில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் B குழுவில் மலேசியா, தென் கொரியா , பங்களாதேஷ் மற்றும் சீன தைபே ஆகிய நான்கு அணிகள் என அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. A குழு மற்றும் B குழுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து, சிறந்த அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என வடிவமைக்க பட்டுள்ளது.

A குழுவில் உள்ள இந்திய அணி ஆகஸ்ட் 29-ந் தேதி முதல் போட்டியில் சீனாவை 4-3 என்ற கணக்கில் திரில் வெற்றி தனது வெற்றி கணக்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ந் தேதி ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் குழு சுற்றில் கடைசி போட்டியில் கஜகஸ்தான் 15-0 என்ற கணக்கில் பந்தாடி புள்ளி 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பெற்றது. அதேபோல A குழுவில் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு அணிகளும் கஜகஸ்தானை வீழ்த்தினாலும் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைய சீனா 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடமும் ஜப்பான் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடமும் பிடித்தது. இதனைத் தொடர்ந்து A குழுவில் இந்தியா மற்றும் சீனா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோல B குழுவில் உள்ள தென் கொரியா ஆகஸ்ட் 29-ந் தேதி முதல் போட்டியில் சீன தைபேவை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியும், மலேசியா, பங்களாதேஷை 4-1 கணக்கில் வீழ்த்தியும் தனது வெற்றி கணக்கை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து மலேசியா ஆகஸ்ட் 30-ந் தேதி தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தென் கொரியா ஆகஸ்ட் 31-ந் தேதி பங்களாதேஷை 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் செப்டம்பர் 1-ந் தேதி தென் கொரியா, பங்களாதேஷை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியும், மலேசியா, சீன தைபேவை 15-0 கணக்கில் வீழ்த்தினர். இதன் மூலம் மலேசியா 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தையும், தென் கொரியா 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
ஆகமொத்தத்தில் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையே சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடைபெற்றது. இதில் செப்டம்பர் 1-ந் தேதி இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையே போட்டி 2-2 கணக்கில் டிராவில் முடிவடைய மலேசியா மற்றும் சீனா அணிகளுக்கு இடையே போட்டி 2-0 கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. அடுத்து செப்டம்பர் 4-ந் தேதி சீனா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையே போட்டி 3-0 கணக்கில் சீனா வெற்றி பெற, அதே நாளில் நடைபெற்ற இந்தியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையேயான மற்றொரு போட்டியில் 4-1 கணக்கில் இந்தியா வெற்றி பெற சூப்பர் 4 சுற்று போட்டியில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
மேலும் இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு அணிகளும் 2 போட்டிகள் முடிவில் ஒரு வெற்றி ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் மற்றும் 2-வது இடத்திலும் சீனா மற்றும் மலேசியா ஒரு வெற்றி ஒரு தோல்வி என 3 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்திலும் இருந்தனர். மேலும் கடைசி போட்டியில் தென் கொரியா, மலேசியா அணியையும் மற்றும் மற்றொரு போட்டியில் இந்தியா, சீனா அணியையும் எதிரிகொள்ளும் சூழ்நிலை உருவானது.

அதாவது இந்த இரு போட்டிகளிலும் எந்த அணிகள் வெற்றி பெறுகின்றனவோ அந்த இரு அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற பரபரப்பான சூழ்நிலைக்கு நான்கு அணிகளும் தள்ளப்பட்டது. இது போன்ற வாழ்வா? சாவா? போட்டி செப்டம்பர் 6-ந் தேதி தென் கொரியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையேயான பலப்பரீட்சையில் 4-3 கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்று மலேசியாவை வீட்டிற்கு அனுப்பி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியுடன் மோதுவது இந்தியாவா அல்ல சீனாவா என்ற நிலையில் அதே நாளில் நடைபெற்ற வாழ்வா? சாவா? போட்டியில் சீனாவை 7-0 கணக்கில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் தென் கொரியாவை சந்திக்க தயாரானது.
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி, தென் கொரியாவை இன்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் அபாரமாக கோலடிக்க இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இது போன்ற ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் அதனை கோலாக மாற்ற தவறவிட்டனர். இந்த நிலையில் போட்டியின் 28 வது நிமிடத்தில் இந்திய வீரர்கள் கூட்டு முயற்சி ஒன்றில் ஈடுபட்டனர்.

கேப்டன் ஹர்மன்பிரித், சஞ்சய் ஆகியோர் பந்தை கடத்தி கொடுக்க அதனை தில்பிரீத் சிங் அபாரமாக அடித்து கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தது. இந்நிலையில் தென் கொரிய அணி பதில் கோல் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடியது. ஆனால் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டியதால் தென் கொரிய அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும் கோல் கணக்கை அதிகமாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த தருணத்தில் ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங், தனது இரண்டாவது கோலை அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனால் கடைசி 15 நிமிடத்தில் தென் கொரிய அணி கடுமையாக போராடியும் இந்திய அணியின் தற்காப்பு ஆட்டத்தை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தென் கொரிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை பயன்படுத்தி இந்திய அணி 50-வது நிமிடத்தில் 4-வது கோல் அடித்தது. எனினும் அடுத்த நிமிடத்தில் தென் கொரிய அணி தங்களது முதல் கோலை அடித்தது. ஆனால் அதற்குப்பின் தென் கொரிய அணியால் மேலும் கோல்களை அடிக்க முடியவில்லை. இதன் மூலம் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வென்று 4-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்று இருக்கிறது.