4 வயது சிறுவனின் தற்செயலான மரணம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாயின் கள்ளக் காதலன், அக்குழந்தையைக் கொலை செய்து, அதை ஒரு விபத்தாக சித்தரிப்பதற்காக அதன் உடலை ஒரு சாக்கடையில் வீசியெறிந்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராட்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள மீரா பயந்தர் அடுத்த நீல்கமல் நாக்கா அருகே உள்ள ஒரு சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலம் தொடர்பான மர்மத்தை காஷ்மீரா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், அக்குழந்தை விபத்தில் இறக்கவில்லை என்பதும், மாறாக, அவனது தாயின் காதலன் அவனை கொடூரமாக அடித்துக் கொன்று, ஆதாரங்களை அழிப்பதற்காக சடலத்தை சாக்கடையில் வீசியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராட்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள மீரா பயந்தர் அடுத்த நீல்கமல் நாக்கா பகுதியில் உள்ள ஒரு திறந்த சாக்கடையில் நான்கு வயது சிறுவனின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில், இது தற்செயலாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று கருதப்பட்டது. இருப்பினும், ஆரம்பகட்ட சம்பவ இட ஆய்வின்போது, காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான கூறுகளைக் கண்டறிந்ததால், சடலம் பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் உள்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் ல்கமல் நாக்கா திறந்த சாக்கடையில் பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை கொண்டதில் ஒருவர் 4 வயது சிறுவனின் உடலை சாக்கடையில் வீசி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து சம்பு சர்மாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவனின் தாய், தனது கணவரை பிரிந்து சம்பு சர்மா என்பவருடன் வசித்து வந்துள்ளார். திங்கட்கிழமை மதியம், அளவுக்கு அதிகமான மது போதையில், தாயின் கண் முன்னாலேயே சிறுவனை கொடூரமாகத் தாக்கிவிட்டு உறக்கியுள்ளனர்.
அடுத்த நாள் காலையில் கண்விழித்தபோது, குழந்தை தனது காயங்களால் உயிரிழந்துவிட்டதை உணர்ந்த சம்பு சர்மா குற்றத்தை மறைக்க, அவன் அந்த உடலை அருகிலிருந்த சாக்கடையில் வீசியதாக காவல்துறையினரின் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். தொடர்ந்து காவல்துறையினர் சம்பு சர்மா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்தும், சிறுவனின் தாய்க்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.